

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத் தில் போலீஸார் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் ரூ.85 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இடுக்கி மாவட்டம், பெருந்தன் மன்னா பகுதியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வர்கீஸ், இன்ஸ்பெக்டர் சித்திக் ஆகியோர் தலைமையிலான போலீஸார் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். காரில் ரூ. 85 லட்சம் பதுக்கப்பட்டிருந்தது. காரில் இருந்த பீவநாடு பகுதியைச் சேர்ந்த யூனோஸ் சலீம்(46), அதே பகுதியைச் சேர்ந்த முகமது நவாஸ்(20), பைசல்(34) ஆகியோரி டம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் ஹவாலா பணத்தைக் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களைக் கைது செய்த போலீஸார் ரூ. 85 லட்சம் பணம் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.