

மக்கள் நலக் கூட்டணியை உடைக்க திமுக சதி செய்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் தா.பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக நிரு பர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
மக்கள் நலக் கூட்டணியை உடைத்து, புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக அதிமுகவுடன் நான் ரகசிய பேச்சு நடத்தி வருவதாக வெளி யான செய்தி முழுக்க முழுக்க கற்பனை யானது. கூட்டணிக்காக அதிமுகவை நான் உட்பட யாரும் அணுகவில்லை. அதற்கான அவசியமும் இல்லை.
கடந்த மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி யிட்டதுபோல, இந்தத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட அதிமுக திட்டமிட்டு வருவதாகத் தெரி கிறது. அந்த அளவுக்கு பலம் இருப்ப தாக அக்கட்சி நினைத்துக் கொண் டிருக்கிறது. எனவே, அதிமுக வுடன் எந்த ரகசிய பேச்சுவார்தையும் நடக்கவில்லை. இந்திய கம்யூ னிஸ்ட் அகில இந்திய தலைவர்கள் அதிமுகவுடன் பேச்சு நடத்தி வருவ தாக வெளிவரும் செய்திகள் முற்றி லும் தவறானது.
அதிமுக, திமுகவுக்கு மாற்று வேண்டும் என விரும்பும் கட்சிகள் மக்கள் நலக் கூட்டணியில் இணை யலாம் என அழைப்பு விடுத்துள்ளோம். அதை ஏற்று வரும் கட்சிகளை வரவேற்போம். அதேநேரத்தில் கூட்ட ணிக்காக யாரிடமும் யாசகம் கேட்க மாட்டோம். மக்கள் நலக் கூட்டணிக்கு தமிழக மக்களிடையே ஆதரவு பெருகி வருகிறது. இதனால் இந்தக் கூட்ட ணியை உடைக்க திமுக சதி செய்து வருகிறது. பழும் நழுவி பாலில் விழும் என காத்திருந்து ஏமாந்தவர்கள், மக்கள் நலக் கூட்டணி உடையும் என கனவு காண்கிறார்கள். இந்தக் கனவு ஒருநாளும் நனவாகாது. தேர்தலுக்குப் பிறகும் இந்தக் கூட்டணி தொடரும்.
எனது உடல்நிலை ஒத்துழைக் காததால் தற்போது ஓய்வில் இருக்கி றேன். கட்சி பத்திரிகை தொடர்பான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். எனவே, மக்கள் நலக் கூட்டணி பொதுக்கூட்டங்களில் பங் கேற்கவில்லை. இவ்வாறு தா.பாண்டி யன் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறும் போது, ‘‘தேமுதிக எப்படியும் தங்கள் கூட்டணிக்கு வந்துவிடும் என்று திமுக எதிர்பார்த்தது. மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் வந்துவிடும் என திமுக தலைவர்கள் எதிர்பார்த்தனர். அது எதுவும் நடக்காததால் மக்கள் நலக் கூட்டணியை உடைத்துவிட வேண்டும் என்பதற்காக தவறான செய்திகளை திமுக பரப்பி வருகிறது. அவர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது’’ என்றார்.