

சென்னை மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
தேர்தல் நன்னடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்களை பெறு வது, அதன் மீது நடவடிக்கைகள் எடுப்பது, தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பது ஆகிய வற்றுக்காக ரிப்பன் மாளிகையில் தேர்தல் பிரிவு சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு வந்தது. தற்போது தயார் நிலையில் உள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புகார் தெரிவிப்பதற்கு என்று தனி புகார் எண்ணும் வழங்கப்பட உள்ளது.
இதனிடையே, தேர்தல் பணியில் ஈடுபடும் மாநகராட்சி அலுவலர்களுக்கான தேர்தல் நன் னடத்தை விதிகள் குறித்த பயிற்சி வகுப்பு ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் பி.சந்திரமோகன் தலைமையில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் டி.ஜி.வினய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.