தேர்தல் நடத்தைவிதி அமல் நிலையில் 7,959 போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதிய தொகை வழங்க உத்தரவு: தேர்தல் ஆணையரிடம் புகார்

தேர்தல் நடத்தைவிதி அமல் நிலையில் 7,959 போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதிய தொகை வழங்க உத்தரவு: தேர்தல் ஆணையரிடம் புகார்
Updated on
1 min read

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் 7,959 ஓய்வூதிய தாரர்களுக்கு 25 தவணைகளில் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை வழங்க சுற்றறிக்கை அனுப்பிய ஓய்வூதிய அறக்கட்டளை நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்குமாறு தலைமை தேர்தல் ஆணையருக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஓய்வூதிய அறக்கட் டளை நிர்வாகி, அனைத்து போக்கு வரத்துக் கழக மேலாண்மை இயக்குநர்களுக்கும் மார்ச் 7-ல் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், ‘2 ஆண்டுகளுக்கும் மேலாக ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை நிலுவையில் உள்ள 7,959 ஊழியர்களுக்கு 24 தவணைகளில் ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள் ளது’ எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை வழங்க உத்தரவிட்டுள்ள ஓய்வூ திய அறக்கட்டளை நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்குமாறு தலைமை தேர்தல் ஆணையருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பணி யாளர் சம்மேளன மாநிலச் செயலர் பத்மநாபன் நேற்று கடிதம் அனுப்பினார்.

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டி ருப்பதாவது: ஓய்வூதிய ஒப் படைப்பு தொகை என்பது ஊழி யர்கள் ஓய்வு பெறும்போது அவர் களின் உடனடித் தேவைக்காக ஒரே தவணையாக வழங்க வேண்டும். இந்த முறை பல ஆண்டுகளாக உள்ளது.

இந்தச் சூழலில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தபிறகு 24 தவணைகளில் ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை வழங்க அறிவித்ததுடன், முதல் தவணையும் வழங்கப்பட்டுள்ளது.

இது பல ஆண்டுகளாக அமலில் உள்ள நடைமுறை விதிகளை மீறிய செயலாகும். எனவே சுற்றறிக்கையைத் திரும் பப் பெற்று, ஒரே தவணையில் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையை வழங்க உத்தரவிட்டு, தேர்தல் நடத்தை விதியை மீறிய அறக்கட்டளை நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in