Published : 02 Jan 2022 05:36 AM
Last Updated : 02 Jan 2022 05:36 AM

பேருந்து பயணிகளிடம் கனிவுடன் நடந்து கொள்வோம்: ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உறுதிமொழி

பயணிகளிடம் கனிவுடன் நடந்துகொள்வோம் என்று, புத்தாண்டையொட்டி பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

தமிழகத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மீதுதொடர்ந்து புகார்கள் தெரிவிப்பதால், போக்குவரத்துக் கழக பணிமனைகளில் பயணிகளுடன் நல்லுறவு பேணுதல் தொடர்பாக சிறப்புபயிற்சிகள் நடத்த உத்தரவிடப்பட் டது.

அதன்படி, கடந்த 2 வாரங்களாகசென்னை, விழுப்புரம், திருநெல்வேலி உள்ளிட்ட அரசுப் போக்குவரத்து கழகங்களின் பணிமனைகளில், பயணிகளுடன் நல்லுறவு பேணுவது, மன அழுத்தமின்றி பணியாற்றுவது தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புத்தாண்டையொட்டி போக்குவரத்துக் கழக பணிமனைகளில் `விபத்தின்றி பேருந்து இயக்குவோம், பயணிகளுடன் கனிவுடன் நடந்து கொள்வோம்' என ஓட்டுநர், நடத்துநர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் கூறும்போது, ‘‘அரசுப் போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் சில தொழிலாளர்கள் செய்யும் தவறுகளால், மற்றவர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. பெரும்பாலான தொழிலாளர்கள் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றி வருகின்றனர். எனவே, பயணிகளுடன் நல்லுறவு, விபத்தின்றி பயணம், மாணவர்கள் படிகளில் பயணம் செய்வதை தடுப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

பெண்கள், மாற்றுத் திறனாளிகள், அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்தாலும், அதற்கான கட்டணத்தை அரசு வழங்குகிறது என்பதை எடுத்துக் கூறி வருகிறோம். அரசுப் போக்குவரத்துக் கழகத்தை சேர்ந்த அதிகாரிகளைத் தவிர, மருத்துவர்கள், யோகாபயிற்சி ஆசிரியர்கள் மூலமும்ஆலோசனைகள் வழங்கப்படு கின்றன’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x