Last Updated : 04 Mar, 2016 08:32 AM

 

Published : 04 Mar 2016 08:32 AM
Last Updated : 04 Mar 2016 08:32 AM

தேர்தல் நேரத்தில் 7 பேரை விடுவிக்க முடிவு: திமுக-காங். கூட்டணிக்கு அதிமுக செக்? - சந்தேகம் கிளப்பும் பாஜக

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ள நிலையில் மத்திய பாஜக அரசு என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிசந்தி ரன், நளினி ஆகிய 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப் பட்டது. 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இந்த 7 பேரையும் மனிதா பிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். காங்கிரஸ், பாஜக தவிர்த்த அரசியல் கட்சிகளும் இதை வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்துள்ளதாகவும், இதுகுறித்து கருத்து தெரிவிக்குமாறும் மத்திய உள்துறை செயலாளருக்கு தமிழக அரசின் தலைமைச் செய லாளர் நேற்று முன்தினம் கடிதம் எழுதி யுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் தேதி எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்ற நிலையில், தமிழக அரசின் இந்த அதிரடி முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவையில் நேற்று இப்பிரச்சி னையை எழுப்பிய காங்கிரஸ் மக்களவை குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘‘ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்வது என்ற தமிழக அரசின் முடிவு துர திருஷ்டவசமானது. நாட்டுக்காக உயிர் நீத்த ராஜீவ் போன்ற தலைவர்களை நாம் கொண்டாட வேண்டும். இந்த 7 பேரும் விடுதலை செய்யப்பட்டால் இதையே முன்னுதாரணமாகக் கொண்டு மற்ற மாநிலங்களும் குற்ற வாளிகளை விடுவிக்கக் கோரி கடிதம் அனுப்பும். எனவே, தமிழக அரசின் முடிவை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்’’ என்றார்.

இந்தப் பிரச்சினையில் பாஜக அரசு என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக ‘தி இந்து’விடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘‘தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில் இப்பிரச்சினையை தமிழக அரசு கையில் எடுத்திருப்பது ஏன் என்பது தெரியவில்லை.

தமிழக அரசின் கடிதம் குறித்து மத்திய அரசு சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கும்'' என்றார். பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசனிடம் கேட்டபோது, ‘‘7 பேர் விடுதலை குறித்து உச்ச நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும். தேர் தல் நேரத்தில் 7 பேர் விடுதலை அரசியல் ஆக்கப்படுகிறது’’ என்றார்.

இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘திமுக - காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை உருவாக்கவும், பாஜக வுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தவும் திட்டமிட்டு இந்த விவகாரத்தை அதிமுக கையில் எடுத்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 7 பேரையும் விடுதலை செய்ய மத்திய அரசு சம்மதித்தால், ராஜீவ் காந்தி கொலையாளிகளை பிரதமர் மோடி விடுதலை செய்துவிட்டதாக நாடு முழுவதும் காங்கிரஸ் பிரச்சாரம் செய்யும்.

இது உத்தரப்பிரதேசம் போன்ற மாநி லங்களில் பாஜகவுக்கு பெரும் பின்ன டைவை ஏற்படுத்தும். நாடாளுமன்றத் திலும் இப்பிரச்சினையை காங்கிரஸ் எழுப்பியுள்ளது. எனவே, 7 பேரை விடுதலை செய்ய ஒருபோதும் பாஜக அரசு சம்மதிக்காது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x