Published : 02 Jan 2022 09:09 AM
Last Updated : 02 Jan 2022 09:09 AM

பாரதி பார்க் வளாகத்தில் கிருஷ்ணர் சிலை உடைப்பு: எம்எல்ஏ வானதி சீனிவாசன் கண்டனம்

பாரதி பார்க் வளாகத்தில் உள்ள கிருஷ்ணர் சிலை உடைக்கப்பட் டது குறித்து போலீஸார் விசாரிக் கின்றனர்.

கோவை மேட்டுப்பாளையம் சாலை, சாயிபாபாகாலனியில், பாரதி பார்க் எனப்படும் பூங்காஉள்ளது. இப்பூங்கா வளாகத்தின் ஒரு பகுதியில் முழு உருவகிருஷ்ணர் சிலை வைக்கப்பட்டுள் ளது. நேற்று காலை 9 மணியளவில்பூங்காவில் ஊழியர்கள் வழக்கம் போல், சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள சிலையை உடைக்கும் சத்தம் கேட்டது. சத்தம் வந்த இடத்துக்கு ஊழியர்கள் சென்று பார்த்த போது, கிருஷ்ணர்சிலை உடைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. சிலையில், முழங்கால் பகுதிக்கு மேலே இருந்தபாகங்கள் உடைக்கப்பட்டு கீழே கிடந்தன. இதுகுறித்து தகவல்அறிந்த பாஜகவினர், இந்து முன்னணி அமைப்பினர் பூங்காவில் திரண்டனர். பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏவும் அங்கு வந்து உடைக்கப்பட்ட சிலையை பார்வையிட்டார். சாயிபாபாகாலனி போலீஸார் அங்கு வந்து விசாரித்தனர். இவ்விவகாரம் தொடர்பாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜகவினர் புகார் மனு அளித்தனர்.

இந்து முன்னணி மாவட்ட செய்தித்தொடர்பாளர் தனபால் கூறும்போது,‘‘சிலை உடைப்பைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,’’ என்றார்.

வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ வெளியிட்ட அறிக்கையில், ‘‘சாயிபாபா காலனி பாரதி பார்க் வளாகத்தில், பல வருடங்களான கிருஷ்ணர் சிலை உள்ளது. ஆன்மிகத்தில் நாட்டம் உடையவர்கள், காலையில் கிருஷ்ணரை வணங்கிவிட்டு நடைபயிற்சிக்கு செல்வது வழக்கம். இங்குள்ள கிருஷ்ணர் சிலையை அடையாளம் தெரியாத நபர் உடைத்துள்ளார்.

இச்செயல் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. இச்செயலை வன்மையாக கண்டிக்கிறேன். சம்பந்தப்பட்டவரை கோவை மாநகர காவல்துறை நிர்வாகத்தினர் உடனடியாக கைது செய்ய வேண்டும்,’’ என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x