

தமிழகத்தில் 49 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு நிர்வாக ரீதியான பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசில் பணியாற்றிவரும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவிமூப்பு மற்றும் காலியிடங்கள் அடிப்படையில் அவ்வப்போது பதவி உயர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில், நிதித் துறை செயலர் நா.முருகானந்தம் உள்ளிட்ட 7 அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலர் நிலையில் பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தற்போது 49 அதிகாரிகளுக்கு பல்வேறு நிர்வாக நிலைகளில் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர்சி. விஜயராஜ்குமார், ஆளுநரின் செயலர் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டில் ஆகிய இருவருக்கும் செயலர் நிலையில் இருந்து முதன்மைச் செயலர் நிலையில்பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, 2006-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளான கதர் வாரிய தலைமை செயல் அதிகாரி பொ.சங்கர் உள்ளிட்ட 8 பேருக்கு கூடுதல் செயலர் நிலையில் இருந்து செயலராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2009-வது ஆண்டு பிரிவு அதிகாரிகள் 21 பேர், 2013-ம்ஆண்டைச் சேர்ந்த 11 பேர் மற்றும்7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் பல்வேறு நிர்வாக நிலைகளில்பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.