தமிழகம் முழுவதும் 363 இடங்களில் வாக்காளர் சேவை மையங்கள் தொடக்கம்: 3 இடங்களில் உடனடி வாக்காளர் அட்டை வழங்க நடவடிக்கை

தமிழகம் முழுவதும் 363 இடங்களில் வாக்காளர் சேவை மையங்கள் தொடக்கம்: 3 இடங்களில் உடனடி வாக்காளர் அட்டை வழங்க நடவடிக்கை
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் 363 வாக்காளர் சேவை மையங்கள் நேற்று முதல் செயல்படத் தொடங்கின. 3 இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை உடனடியாக தயாரித்து வழங்கும் இயந்திரங்களும் நிறுவப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவைக்கு மே 16-ம் தேதி ஒரே கட்டமாக வாக் குப்பதிவு நடத்தப்படுகிறது. இதை யடுத்து, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க தேர்தல் ஆணையம் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 22-ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன் ஏப்ரல் 15-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன்படி, தற்போது கல்லூரி களில் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை பெயர் சேர்க்காதவர்கள் ஆன்லைன் மூலம் சேர்த்துக் கொள்ள லாம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத் தம், முகவரி மாற்றம், புதிய வாக்காளர் அட்டை பெறுதல் உள் ளிட்ட பணிகளில் பொதுமக்களுக்கு உதவுவதற்காக டிஆர்ஓ அலுவல கங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவல கங்கள் மற்றும் சென்னை மாநக ராட்சி மண்டல அலுவலகங்கள் என என 363 இடங்களில் வாக்காளர் சேவை மையம் அமைக்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்திருந்தார்.

இதன்படி, தமிழகம் முழுவதும் வாக்காளர் சேவை மையங்கள் நேற்று முதல் செயல்பட தொடங் கின. மேலும், சென்னையில் 3 இடங் களில் புதிய வாக்காளர் அடையாள அட்டை தயாரிப்பதற்கான இயந் திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த மையங்களில், தேர்தல் தொடர் பான புகார் தெரிவிப்பதற்கான சேவையும் விரைவில் தொடங் கப்பட உள்ளது.

கூடுதல் துணை ராணுவப் படைகள்

தமிழகத்தை பொறுத்தவரை தற்போது 65, 616 வாக்குச் சாவடிகள் உள்ளன. வாக் காளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஏற்கெனவே 700-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு ஆணையத்தின் அனுமதியை தமிழக தேர்தல் துறை கோரி யுள்ளது. இதுதவிர, தற்போது மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அந்தந்த பகுதிகளில் பதற்ற மான, மிக பதற்றமான வாக்குச் சாவடிகளை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவற்றில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு அதிகரிக்கப்படும்.

துணை ராணுவப்படையின் தேவை தொடர்பாக ஆலோசிக்க, தேர்தல் ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியும் பங்கேற்றார். இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘‘கடந்த தேர்தலின்போது 240 கம்பெனி துணை ராணுவப்படையினர் வந்துள்ளனர். ஒரு கம்பெனிக்கு 72 வீரர்கள் இருப்பார்கள். இந்தமுறை துணை ராணுவப் படையினர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கப்படும் என தெரிகிறது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in