

தஞ்சை அருகே டிராக்டர் ஜப்தியின்போது விவசாயி பாலனை தாக்கிய பாப்பா நாடு காவல் நிலைய ஆய்வா ளர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட் டார்.
பாலன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு தமிழக தலைமைச் செயலாளர், காவல் துறை தலைமை இயக்குநர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இதையடுத்து பாப்பாநாடு காவல்நிலைய தலைமைக் காவலர்கள் ராஜா, குமரவேல், முதல்நிலைக் காவலர் ஏசுராஜ் ஆகிய 3 பேரும் தஞ்சை ஆயுதப்படை பிரிவுக்கு நேற்று முன்தினம் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், பாப்பாநாடு காவல் நிலைய ஆய்வாளர் குமரவேல் தஞ்சை காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாற்றம் செய்யப்பட்டார்.