ஐபிஎஸ் அதிகாரிகள் 16 பேருக்கு டிஐஜியாக பதவி உயர்வு

ஐபிஎஸ் அதிகாரிகள் 16 பேருக்கு டிஐஜியாக பதவி உயர்வு
Updated on
1 min read

சென்னை: தமிழக காவல்துறையில் எஸ்.பி. அந்தஸ்தில் இருக்கும் 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஐஜியாகப் பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் எஸ்.பி.க்களாகவும், மாநகரங்களில் துணை ஆணையர்களாகவும் விஜயகுமார், திஷா மிட்டல், டாக்டர் துரை, மகேஸ், தர்மராஜன், டாக்டர் அபினவ் குமார், சிபி சக்கரவர்த்தி, சமந்த் ரோகன் ராஜேந்திரா, ஜியாவுல்ஹக், டாக்டர் விஜயகுமார், பகலவன், சாந்தி, விஜயலட்சுமி, ஜெயச்சந்திரன், மனோகர், வெண்மதி ஆகிய 16 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளனர்.

இவர்களுக்கு டி.ஐ.ஜியாகப் பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் இதற்கான உத்தரவை வெளியிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in