Last Updated : 22 Mar, 2016 07:53 AM

 

Published : 22 Mar 2016 07:53 AM
Last Updated : 22 Mar 2016 07:53 AM

ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 2 தொகுதிகளில் வெற்றி பெறாவிட்டால் பதவி பறிப்பு: மாவட்டச் செயலாளர்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

தங்கள் மாவட்டத்தில் குறைந்தது 2 தொகுதிகளில் வெற்றி பெறா விட்டால் அந்த மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்படும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தல் பணிகள் குறித்து விவாதிப்பதற்காக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கட்சித் தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேற்று நடந்தது. அறிவித்தபடி காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது. ஆனால், திமுக தலைவர் கருணாநிதி காலை 9.45 மணிக்கே வந்துவிட்டார். திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மற்றும் 65 மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டம் தொடங்கியதும் பேசிய ஸ்டாலின், ‘‘கூட்டணி குறித்து கருணாநிதியும், நாங்களும் முடிவு செய்வோம். எனவே, கூட்டணி குறித்து யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுகவின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது, எந்தெந்த தொகுதிகளை கூட்டணி கட்சி களுக்கு விட்டுக்கொடுக்கலாம், வெற்றி பெற என்ன திட்டம் வைத் துள்ளீர்கள், பிரச்சார வியூகம், தேர்தல் நிதி வசூல், வெற்றிக்கு தடையாக இருக்கும் பிரச்சி னைகள் ஆகியவை குறித்து பேச வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து க.பொன்முடி, எ.வ.வேலு, எம்ஆர்கே பன்னீர்செல்வம், ஜெ.அன்பழகன், மா.சுப்பி ரமணியன், ஆர்.காந்தி, குத்தாலம் பி.கல்யாணம், ஆ.நாச்சிமுத்து, பா.மு.முபாரக் உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்கள் தங்களது மாவட்டத்தில் உள்ள தொகுதி களின் நிலவரங்களை எடுத்துக் கூறி யுள்ளனர். நிறைவாக கருணாநிதி, க.அன்பழகன், ஸ்டாலின், துரை முருகன் ஆகியோர் பேசியுள் ளனர்.

‘கடந்த தேர்தலில் 119 தொகுதி களில் மட்டுமே போட்டியிட்டோம். இதனால், திமுகவை அனைவரும் குறைத்து மதிப்பிட்டனர். எனவே, இந்தத் தேர்தலில் குறைந்தது 160 தொகுதிகளில் போட்டியிட வேண்டும். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 50 தொகுதிகள் உள்ளன. இங்கு அதிமுக அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளதால் வெற்றி உறுதி. எனவே, இந்தத் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கக் கூடாது' என பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் கூறியுள்ளனர்.

சென்னை மாவட்டச் செயலா ளர்கள் பேசும்போது, ‘‘கடந்த 3 தேர்தல்களாக சென்னையில் திமுகவுக்கு சரிவு ஏற்பட்டது. மழை, வெள்ளத்தால் மீண்டும் திமுக வுக்கு சாதகமான சூழல் உருவாகி யுள்ளது. எனவே, சென்னை மாநகர், புறநகரில் கூட்டணி கட்சி களுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கக் கூடாது’’ என வலியு றுத்தி உள்ளனர். பொதுச்செய லாளர் க.அன்பழகன், ‘‘மழை, வெள் ளத்தால் அதிமுக அரசுக்கு எதிராக மக்களிடம் எழுந்துள்ள அதிருப்தியை திமுகவினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக கூட்டத்தில் பங்கேற்ற மாவட்டச் செயலாளர் ஒருவர் ‘தி இந்து’விடம் கூறி யதாவது:

மழை, வெள்ள பாதிப்புகள், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் பற்றிய செய்திகள் ஆகியவற்றால் அதிமுகவுக்கு மக்களிடம் உள்ள அதிருப்தியை தேர்தல் வெற்றியாக மாற்ற வேண்டும். கோஷ்டி அரசியலில் ஈடுபடாமல் ஒற்றுமையாக தேர்தல் பணியாற்ற வேண்டும் என கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் தெரிவித்தனர்.

65 மாவட்டச் செயலாளர்களும் தங்களது மாவட்டத்தில் குறைந் தது 2 தொகுதிகளில் வெற்றியை பெற்றுத்தர வேண்டும். இல்லை யெனில் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்படும் என ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார். இந்தத் தேர்தலில் திமுக வெற்றி பெறாவிட்டால் நமக்கு எதிர்காலம் இல்லை என்பதை மாவட்டச் செயலாளர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என கருணாநிதி வலியுறுத்தினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டம் முடிந்ததும் தேமுதிக வுடன் கூட்டணி பேச்சு நடந்து வரு கிறது என கருணாநிதி கூறியதால் திமுக மாவட்டச் செயலாளர்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x