

தமிழகத்தில் சம்பிரதாய அரசியலை செய்து கொண்டிருந்தால் காங்கிரஸ் வளர்ச்சி அடையாது என கார்த்தி சிதம்பரம் எம்பிதெரிவித்தார். இதுகுறித்துஅவர் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடகத்தில் நடைபெற்ற நகர்ப்புறத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 2023-ம்ஆண்டு கர்நாடகாவில் காங்கிரஸ்ஆட்சி அமைக்கும். அடுத்த 30 ஆண்டுகள் இந்திய அரசியலுக்கு மையமாக பாஜக இருக்கும் என்று பிரசாந்த்கிஷோர் கூறியதை ஏற்றுக் கொள்கிறேன்.
தமிழகத்தில் குழந்தைகள், பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது தொடர்ந்து நடைபெறுகிறது. இதுகுறித்த புகார்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெண்கள் சாமியாராக வேண்டுமென விரும்பினால் அதற்கான உரிமையை அனைத்து மதத்திலும் கொடுக்க வேண்டும்.
5 மாநில சட்டப்பேரவைத்தேர்தலில் காங்கிரஸுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் சவால்கள்,கட்சிக்குள் போட்டிகள் உள்ளன.உ.பி.யில் காங்கிரஸ் கட்சி கட்டுமானம் வலிமையாக இல்லை.இருப்பினும் தேர்தலில் பெண்களுக்கு 40 சதவீதம் கொடுப்போம் எனப் பிரியங்கா புது முயற்சி எடுத்திருக்கிறார். இதற்கு எதிர்காலத்தில் பலன் உண்டு.
தமிழகத்தில் சம்பிரதாய சடங்குஅரசியலை காங்கிரஸ் கட்சிசெய்து கொண்டிருந்தால் வளர்ச்சி பெறாது. மக்கள் மனநிலைக்கு ஏற்ப செயல்பட வேண்டும். காங்கிரஸ் தலைவர்களுக்கு புதிய சிந்தனை வேண்டும்.
அதிமுக ஆரோக்கியமான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை. முன்னாள் அமைச்சரை காவல் துறை இன்னும் தேடுவதுவியப்பாக உள்ளது. தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை செலுத்த தமிழக அரசு திட்டம் கொண்டு வர வேண்டும்.