

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் என கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகர காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகரில் கடந்த 2021-ம்ஆண்டு 2 ஆதாயக் கொலைகள், 2 கூட்டுக் கொள்ளைகள் நடந்துள்ளன. 27 கொலை, 41 கொலை முயற்சி,18 அடிதடி வழக்குகள் பதிவாகியுள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் (போக்ஸோ சேர்க்காமல்) 235 வழக்குகளும், போக்ஸோவில் 77 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர். 70 பேர்குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு பாதிப்பு, குற்றத் தடுப்பு தொடர்பாக, 239 பேரிடம் பிணை உறுதிமொழிப் பத்திரம் பெறப்பட்டுள்ளது.
102 உயிரிழப்பு விபத்துகள், 747உயிரிழப்பு அல்லாத விபத்துகள் ஏற்பட்டுள்ளன. சாலை போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 2,716வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள் ளன.
கஞ்சா விற்றது தொடர்பாக 189 பேரும், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக 1,634 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகர காவல்ஆணையர் பிரதீப் குமார் கூறும்போது, ‘‘கடந்த 2021-ல் நடந்த கொலைமற்றும் கூட்டுக்கொள்ளை வழக்குகள் அனைத்திலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 100 சதவீதம்திருட்டு பொருட்கள் மீட்கப்பட்டுள் ளன. வழிப்பறி வழக்குகளில் 72 சதவீதம், வீடு புகுந்து திருட்டு வழக்குகளில் 49 சதவீதம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருடு போன 117இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. ரூ.2 கோடி மதிப்புள்ள திருடு போன பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பான ஆட்சியரின் உத்தரவை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சர்ச்சைக்குரிய வகையில் சமூகவலைதளங்களில் கருத்துகள் பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கும், சாலை விபத்துகளை தடுக்க, வாகனஓட்டுநர்களுக்கும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகி றது. இரவு ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள் ளது. மாநகரில்1,872 சிசிடிவி கேமராக்கள் புதியதாக பொருத்தப் பட்டுள்ளன’’ என்றார்.