Published : 31 Mar 2016 05:56 PM
Last Updated : 31 Mar 2016 05:56 PM

திண்டுக்கல் மாவட்டத்தில் ஏழு தொகுதிகளிலும் களம் இறங்கும் அதிமுக, பாமக, பாஜக

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளிலும் அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சிகள் போட்டியிட உள்ளன. திமுக அதிகபட்சமாக ஆறு தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழநி, ஒட்டன் சத்திரம், நிலக்கோட்டை, நத்தம், ஆத்தூர், வேடசந்தூர் ஆகிய ஏழு தொகுதிகள் உள்ளன.

அதிமுக தொடங்கியது முதல் கடந்த ஒன்பது தேர்தல்களில், இதுவரை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது தவிர மீதமுள்ள தொகுதிகளில் மட்டுமே அதிமுக போட்டியிட்டு வந்துள்ளது. கடந்த தேர்தலில், திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக தனது கூட்டணிக் கட்சியாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், தேமுதிகவுக்கு தலா ஒரு தொகுதியை ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள நான்கு தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் ஒட்டன்சத்திரம் தவிர, மீதமுள்ள மூன்று தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்றது.

இந்த முறை அதிமுகவில் கூட்டணி சேர்ந்துள்ள கட்சிகளுக்கு, திண் டுக்கல் மாவட்டத்தில் பெரிய செல்வாக்கு இல்லை.

இதனால் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படாமல் ஏழு தொகுதிகளிலும் அதிமுக போட்டியிட உள்ளது.

பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சிகளும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடு கின்றன. நாம் தமிழர் கட்சி ஏழு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.

திமுகவை பொறுத்தவரை அதன் கூட்டணிக்கட்சியான காங்கிரசுக்கு நிலக்கோட்டையை ஒதுக்க வாய்ப்புள்ளது என் பதால், மீதமுள்ள ஆறு இடங்களில் அக்கட்சி களமிறங்க வாய்ப்புள்ளது.

அதிமுக, திமுக இடையே ஆறு தொகுதிகளில் நேரடிப் போட்டி நிலவ வாய்ப்புள்ளது.

தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியில் இந்திய கம்யூ னிஸ்ட் தவிர மற்ற கட்சிகள் தொகுதிகளை பிரித்துக் கொண்டு போட்டியிட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x