

சென்னையில் 19-வது சர்வதேச திரைப்பட விழா தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவை 19 ஆண்டுகளாக ஒருங்கிணைத்து வரும் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (Indo Cine Appreciation Foundation) திரைப்படச் சங்கத்தின் பொதுச் செயலாளரும் திரைப்பட விழா இயக்குநருமான இ.தங்கராஜ் கூறியதாவது:
கடந்த சில ஆண்டுகளில் 53 உலக நாடுகளிலிருந்து வெளியான 100 படங்கள் 19-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்படுகின்றன. இவற்றில் சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் போட்டிப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட ஈரான் நாட்டின் ‘ஹீரோ’ (A Hero), ஆஸ்திரேலியாவின் ‘வென் பொமேகிரேனட்ஸ் ஹவுல்' (When Pomegranates Howl), இந்தோனேசியாவின் 'யுனி' (Yuni), தென் கொரியாவின் 'டேக்ஸி டிரைவர்’ உள்ளிட்ட படங்கள் சிறப்பு கவனம் பெறுகின்றன.
திரையிடப்படும் இந்தியப் படங்களில், தமிழ்ப் படங்கள்: உடன்பிறப்பே, கர்ணன், தேன், கட்டில், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும், ஐந்து உணர்வுகள், மாறா, பூமிகா, சேத்துமான், கயமை கடக்க.
மலையாளப் படங்கள்: காக்கத்துருத்து, நாயாட்டு, நிறைய தத்தகளுள்ள மரம், சன்னி.
பிறமொழி இந்தியப் படங்கள்: 21-ஸ்ட் டிஃபன் - குஜராத்தி, டொல்லு - கன்னடம், ஃபனரல் - மராத்தி, கல்கொக்கோ - பெங்காலி, நாட்யம் - தெலுங்கு, நிவாஸ் - மராத்தி, கிலியு பஞ்சரதொலில்லா – கன்னடம், செம்கோர் - திமாசா, அன்ஹெர்ட் - தெலுங்கு, வர்துல் - மராத்தி.
சென்னை பிவிஆர் மல்டிபிளெக்ஸ், சத்யம் சினிமாஸ், சாந்தம், சீசன்ஸ், சிக்ஸ் டிகிரீஸ் திரையரங்குகளில் இவை திரையிடப்படுகின்றன. இவ்வாறு இ.தங்கராஜ் தெரிவித்துள்ளார்.