துபாயில் இருந்து திருப்பத்தூருக்கு திரும்பிய இளைஞருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி

துபாயில் இருந்து திருப்பத்தூருக்கு திரும்பிய இளைஞருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி
Updated on
1 min read

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த கும்மிடிகாம்பட்டி கிரா மத்தைச் சேர்ந்த 30 வயது இளை ஞர் ஒருவர் துபாய் நாட்டில் பணி யாற்றி வருகிறார். இவர், கடந்த 28-ம் தேதி துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்தார்.

சென்னை விமான நிலையத் தில் அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர் சொந்த ஊரான கும்மிடிகாம்பட்டிக்கு வந்தார். கரோனா பரிசோதனை எடுக்கப் பட்டதால் முடிவுகள் வெளியாகும் வரை அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். வெளியிடங்களுக்கு செல்லக்கூடாது என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியிருந் தனர். அதன்படி அந்த இளைஞர் தன்னுடைய வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில், அந்த இளை ஞருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பதாக சென்னையில் இருந்து திருப்பத்தூர் மாவட்ட சுகாதார துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த இளைஞர் திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஒமைக்ரான் சிறப்பு வார்டில் நேற்று காலை அனுமதிக்கப்பட்டார். அங்கு, மருத்துவர்கள் அவரை தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர். அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளித்து வரு கின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் முதன் முதலாக ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் சுகாதாரத்துறைக்கு அறி வுறுத்தப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்ட இளைஞரின் பெற்றோர் மற்றும் மனைவி ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் கரோனா பரி சோதனை செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கும்மிடிகாம் பட்டி கிராமத்தில் மாவட்ட சுகாதார துறையினர் அங்கு முகாமிட்டு காய்ச்சல், சளி தொந்தரவு, உடல் சோர்வு உள்ளிட்ட பாதிப்புகளில் யாரேனும் உள்ளார்களா? என்பது குறித்து வீடு, வீடாக சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இது குறித்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலர் குமரவேல் கூறும்போது, ‘‘துபாயில் இருந்து கந்திலி அருகேயுள்ள கிராமத்துக்கு திரும்பிய இளைஞர் ஒருவர் தற்போது திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அமைக்கப் பட்டுள்ள ‘ஒமைக்ரான் சிறப்பு வார்டில்’ அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான கரோனா பரிசோதனை முடிவுகள் இன்னும் எங்களுக்கு வந்து சேரவில்லை. இருப்பினும், வெளிநாட்டில் இருந்து திரும்பியதால் அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியதின் பேரில், அந்த இளைஞருக்கு மருத்துவ சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப் பட்டு வருகிறது. அவர் 2 தடுப்பூசிகள் செலுத்தியுள்ளதால் எந்த வித உடல் குறைபாடும் இல்லாமல் அவர் நலமுடன் உள்ளார் ’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in