Published : 31 Dec 2021 08:24 AM
Last Updated : 31 Dec 2021 08:24 AM

7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலராக அந்தஸ்து வழங்கி உத்தரவு

தமிழக நிதித்துறை செயலர் என்.முருகானந்தம் உள்ளிட்ட 1991-ம்ஆண்டு பிரிவை சேர்ந்த 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அவர்களது பணிமூப்பு, தகுதி மற்றும் காலியிட அடிப்படையில் செயலர் நிலையில் இருந்து முதன்மை செயலர், அடுத்ததாக கூடுதல் தலைமைச் செயலர் என அந்தஸ்து உயர்த்தப்படுகிறது.

அந்த வகையில், 7 ஐஏஎஸ் அதிகாரிகள் முதன்மை செயலர் நிலையில் இருந்து கூடுதல் தலைமைச் செயலர் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தலைமைச் செயலர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த 1991-ம் ஆண்டில் ஐஏஎஸ் அதிகாரிகளாக தேர்வான தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழக தலைவர் டி.கே.ராமச்சந்திரன், டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலக கூடுதல் செயலர் எஸ்.கோபாலகிருஷ்ணன், எரிசக்தி துறை செயலர் ரமேஷ் சந்த் மீனா, நிதித் துறை செயலர் நா.முருகானந்தம், திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநர் சந்திரகாந்த் பி காம்ப்ளே, சுற்றுச்சூழல், வனத் துறை செயலர் சுப்ரியா சாஹு, சமூகநலத் துறை செயலர் ஷம்பு கல்லோலிகர் ஆகிய 7 பேருக்கும் கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x