Published : 31 Dec 2021 02:40 PM
Last Updated : 31 Dec 2021 02:40 PM

சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் 3 நாட்கள் தடை: கன்னியாகுமரியில் தீவிர கண்காணிப்பு

நாகர்கோவில்

புத்தாண்டை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலா மையங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு, இன்று முதல் 2-ம் தேதி வரை 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் இந்த 3 நாட்களும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி சூரிய அஸ்தமன சாலை, ஜீரோ பாயின்டில் இருந்து கடற்கரைக்கு யாரும் செல்லாத வகையில், போலீஸார் தடுப்பு வேலி அமைத்துள்ளனர்.

திற்பரப்பு அருவி, வட்டக்கோட்டை, சொத்தவிளை கடற்கரை, ஆயிரங்கால் பொழிமுகம், மாத்தூர் தொட்டிப்பாலம், பத்மநாபபுரம் அரண்மனை உட்பட அனைத்து சுற்றுலா மையங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கோயில்களில் பத்தர்கள் புத்தாண்டு வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

“மாவட்டத்தில் 1,500 போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் அத்துமீறுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் 50 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. குடிபோதையில் வாகனம் ஓட்டுவோரின் வாகனம் பறிமுதல் செய்யப்படும். அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்” என, எஸ்.பி. பத்ரிநாராயணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x