Published : 25 Mar 2016 01:02 PM
Last Updated : 25 Mar 2016 01:02 PM

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடரும்: கருணாநிதியுடனான சந்திப்புக்குப் பின் குலாம் நபி ஆசாத் தகவல்

சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியுடன் குலாம்நபி ஆசாத் தலைமையிலான காங்கிரஸ் தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர். இதில் எந்த முடிவும் எட்டப்படாததால் இழுபறி நிலை நீடிக்கிறது. அடுத்த சந்திப்பின்போது, தொகுதி பங்கீடு குறித்து உடன்பாடு ஏற்படும் என்று குலாம்நபி ஆசாத் நம்பிக்கை தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலை யில், காங்கிரஸுடன் நேற்று பேச்சுவார்த்தை தொடங்கியது.

இதற்காக காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம்நபி ஆசாத், காங்கிரஸ் அகில இந்தியப் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோர் நேற்று காலை கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.

பகல் 12.24 மணி வரை 77 நிமிடங்கள் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங் கோவன், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.கோபிநாத், திமுக தரப்பில் பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் பங்கேற்றனர்.

சந்திப்பு முடிந்ததும் நிருபர் களிடம் குலாம்நபி ஆசாத் கூறிய தாவது:

திமுக தலைவர் கருணாநிதி யுடன் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூ கங்கள் குறித்து விரிவாக விவா தித்தோம். தொகுதிகளின் எண் ணிக்கை தொடர்பாக இப்போது தான் பேச்சுவார்த்தையை தொடங் கியுள்ளோம். காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள், தமிழக தலைவர் களுடன் கலந்து பேசி முடிவெடுக்க எங்களுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. இன் றைய சந்திப்பில் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை. இது இறுதியான கூட்டம் அல்ல. அடுத்த சந்திப்பின்போது தொகுதி பங்கீடு குறித்து உடன்பாடு ஏற்படும். காங்கிரஸுக்கான தொகுதிகளை திமுக முடிவு செய்து அறிவிக்கும் என நம்புகிறோம். இவ்வாறு குலாம்நபி ஆசாத் கூறினார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், ‘‘காங்கிரஸ் தலைவர்களுடன் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. காங்கிர ஸுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதை இப்போது கூற முடியாது’என்றார்.

பின்னர் தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனுக்கு வந்த தலைவர்கள் அங்கு இளங்கோவன் உள்ளிட்ட தேர்தல் குழுவினருடன் ஆலோசனை நடத்தினர்.

இழுபறி ஏன்?

தேமுதிக மக்கள் நலக் கூட்ட ணிக்கு சென்றுவிட்டதால் குறைந்த பட்சம் 50 தொகுதிகள் வேண்டும் என கருணாநிதியிடம் ஆசாத் தெரி வித்துள்ளார். ஆனால், காங்கிரஸில் இருந்து பிரிந்து தமாகா உருவாகி உள்ளதால் 30 முதல் 35 தொகுதிக்கு மேல் வாய்ப்பு இல்லை என ஸ்டாலின் உறுதியாக தெரிவித்துள்ளார். வேறு சில கட்சிகளும் கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளதால் 35-க்குள் முடித்துக் கொள்ளலாம் என கருணாநிதி கூறியுள்ளார்.

மிகக் குறைவான தொகுதிகளில் போட்டியிட்டால் கவுரவமாக இருக்காது என்பதால் 50 தொகுதி களை காங்கிரஸ் தரப்பு வலியுறுத் தியுள்ளது. ஆனால், அதனை ஏற்க ஸ்டாலின் மறுத்துள்ளார். இதனால் சோனியா, ராகுலுடன் பேசிவிட்டு முடிவு செய்து கொள்ளலாம் என ஆசாத் கூறியுள்ளார். இதனால் எந்த முடிவும் ஏற்படவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.

ஜவாஹிருல்லா சந்திப்பு

தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மூத்த தலைவர் ஹைதர் அலி உள்ளிட்டோர் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அப்போது மமகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

சந்திப்புக்கு பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய ஜவாஹி ருல்லா, ‘‘திமுக கூட்டணியில் மமகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளன. இதற்காக கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி யைத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்தெந்த தொகுதிகள் என்பது பின்னர் முடிவு செய்யப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x