Published : 12 Mar 2016 09:23 AM
Last Updated : 12 Mar 2016 09:23 AM

தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.4.70 கோடி சிக்கியது: அரசு கருவூலங்களில் பணம் ஒப்படைப்பு

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல் லப்பட்ட ரூ.4.70 கோடி பணம் பறி முதல் செய்யப்பட்டது.

சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி தமிழகம் முழுவதும் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இதன்படி நேற்று மதியம் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட, திரு வானைக்கா கும்பகோணத்தான் சாலையில் வட்டாட்சியர் பவானி, சிறப்பு உதவி ஆய்வாளர் முருகே சன் உள்ளிட்டோர் அடங்கிய கண் காணிப்புக் குழுவினர் சோதனை யில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த ஒரு வேனில் பெட்டி பெட்டியாக பணம் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், திருச்சி மாநகரி லுள்ள சில வங்கிகளின் ஏடிஎம்களில் நிரப்புவதற்காக தனியார் பாதுகாப்பு நிறுவனத்தினர் கொண்டு செல்வ தாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதற்குரிய ஆவணங்கள் எதுவும் இல்லை.

இதையடுத்து, வேன் ஓட்டுநர் லால்குடியைச் சேர்ந்த வினோத் (23), விநியோக மேலாளர் திருப் பராய்த்துறையைச் சேர்ந்த சரவ ணன், டெக்னீஷியன் அண்ணா துரை, பாதுகாவலர் அம்மையப்பன் ஆகிய 4 பேரையும் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். பணத்துடன் வேனும் அங்கு கொண்டு செல் லப்பட்டது.

தகவலறிந்த ஸ்ரீரங்கம் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜராஜன் உள்ளிட்டோர், 4 பேரிடமும் விசாரணை நடத்தினர். மேலும், 3 இரும்புப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த பணத்தைக் கணக்கிட்டனர். அப்போது, 3 கோடியே 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது.

உரிய ஆவணங்களை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாள ரிடம் (கணக்கு) சமர்ப்பித்து, பணத்தை திரும்ப பெற்றுக்கொள் ளுமாறு தனியார் பாதுகாப்பு நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட வங்கிகளின் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மாவட்ட கருவூலத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது.

திருச்சி செம்பட்டு சோதனைச் சாவடியில் நேற்று முன்தினம் சுமார் ரூ.35 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கைப்பற்றப்பட்ட நிலை யில், நேற்று கும்ப கோணத்தான் சாலையில் ரூ.3.28 கோடி சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேபோல, தஞ்சாவூர் தொல் காப்பியர் சதுக்கம் பகுதியில் நேற்று வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்தபோது, பட்டுக் கோட்டையிலிருந்து வந்த ஒரு காரில் ரூ.50 லட்சம் ரொக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. காரிலிருந்தவர்கள், அந்தப் பணத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் பட்டுக்கோட்டை கிளை யிலிருந்து மதுரை கிளைக்கு கொண்டு செல்வதாகத் தெரிவித் தனராம். ஆனால், அதற்கான ஆவணங்கள் இல்லாததால் காரை யும், பணத்தையும் பறிமுதல் செய்த தேர்தல் கண்காணிப்புக் குழுவினர், வட்டாட்சியர் அலுவல கத்தில் ஒப்படைத்தனர்.

இதேபோல், திருநெல்வேலி பகுதியில் உரிய ஆவணங்களின்றி வேனில் எடுத்துச் செல்லப்பட்ட 12 லட்சம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பட்ற பெரும்புதூர் சோதனைச்சாவடி அருகே, நிலையான கண்காணிப் புக் குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப் போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், ரூ.79 லட்சம் பணம் இருந்தது. அந்த பணம், தனியார் நிதி நிறுவ னத்துக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்து, கருவூலத்தில் ஒப்படைத்தனர். நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் நடந்த வாகன சோதனையில், உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல் லப்பட்ட பணம் ரூ.4.70 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறிப் பிடத்தக்கது.

குவைத்துக்கு கடத்த முயன்ற மாத்திரைகள்

திருவள்ளூர் அருகே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடி வழியாக வந்த காரை, கண்காணிப்புக் குழுவினர் நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 3 சிறிய பார்சல்களில், 250-க்கும் மேற்பட்ட கருத்தடை மாத்திரைகள் இருந்தன. சென்னை விமான நிலையம் வழியாக, குவைத்துக்கு இந்த மாத்திரைகளை கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து மாத்திரைகளையும், டிரைவர் உள்ளிட்ட காரில் இருந்த 5 பேரை யும் திருவள்ளூர் தாலுகா போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீஸார் மற்றும் திருவள்ளூர் மாவட்ட மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x