Published : 30 Dec 2021 08:34 AM
Last Updated : 30 Dec 2021 08:34 AM

மதுரை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை இறுதி செய்யும் பணி தீவிரம்

மதுரை

மதுரை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்யும் பணி யில் நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள் ளாட்சித் தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன.

தெற்கு மாவட்ட பொறுப் பாளர் கோ.தளபதி பொறுப்பில் 38 வார்டு கள், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் கட்டுப்பாட்டில் 33 வார்டுகள், புறநகர் வடக்கு மாவட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி கட்டுப்பாட்டில் 14 வார்டுகள், புறநகர் தெற்கு மாவட்ட பொறுப் பாளர் எம்.மணிமாறன் பொறுப்பில் 15 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கோ.தளபதி, பொன்.முத்துரா மலிங்கம் ஆகியோர் போட்டியிட விரும்புவோரிடம் ஏற்கெனவே மனுக்களை பெற்றுள்ளனர். மதுரை புறநகர் வடக்கு மாவட் டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி நேற்று விருப்ப மனுக்களை பெற்றார். புறநகர் பகுதியிலுள்ள நகராட்சி, பேரூராட்சிகளின் வார்டுகளில் போட்டியிட 500-க் கும் மேற்பட்டோர் மனுக்களை அளித்தனர். புறநகர் தெற்கு மாவட்டத்தில் வேட்பாளர்களை தேர்வுசெய்ய அதன் பொறுப் பாளர் எம்.மணிமாறன் நேற்று நேர் காணலை நடத்தினார்.

100 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்யும் பணியில் நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இது குறித்து மாவட்ட நிர்வாகி ஒருவர் கூறியதாவது: 80 வார் டுகள் வரை வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். அமைச்சர் பி.மூர்த்தி தனது பொறுப்பில் உள்ள 14 வார்டுகளின் வேட்பாளர்களை முன்னரே முடிவு செய்துவிட்டார். இவர்கள் தற்போது வார்டுகளில் சாலைகளை சரி செய்து தருவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதே போல், மற்ற நிர்வாகிகளும் வேட்பாளர் தேர்வை முடிக்கும் நிலையில் உள்ளனர். கடும் போட்டி நிலவும் சில வார்டுகளில் மட்டும் 2 வேட்பாளர்கள் பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. 20 வார்டுகளில் இத்தகைய நிலை உள்ளது.

சிலருக்கு சீட்டு வாங்கித் தருவதில் மாவட்ட பொறுப்பாளர் கள் காட்டும் ஆர்வத்தை, சிலருக்கு சீட்டே கிடைக்கக் கூடாது என்பதிலும் காட்டி வருகின்றனர். இத்தகைய வார்டுகளில் மாவட்டப் பொறுப்பாளர்களை கண்டுகொள்ளாமல் கட்சியின் தலைமையிட நிர்வாகிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோரின் பரிந்துரையைப் பெற சிலர் முயன்று வருகின்றனர்.

5 மாவட்ட பொறுப்பாளர்கள் தரப்பிலும் மேயர் வேட்பாளர் என தலா ஒருவரை முன்னிறுத்தும் வகையில் பட்டியலை இறுதி செய்துள்ளனர்.

நிர்வாகிகள் அனுப்பும் பட்டியல் காவல்துறையின் உளவுப்பிரிவு மற்றும் திமுக தலைமையால் நியமிக்கப்படும் நிர்வாகிகள் அளிக்கும் அறிக்கையை பொருத்தே இறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x