Published : 30 Dec 2021 08:52 AM
Last Updated : 30 Dec 2021 08:52 AM

நெல்லையில் மீண்டும் கலை மன்றம்; காணி மக்களின் வாழ்வியல் குறும்பட முன்னோட்டம்: தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்

திருநெல்வேலி மாவட்ட கலைமன்றம் தொடக்க விழா பாளையங்கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் நடை பெற்றது. இவ்விழாவில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை மாநில தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். காணி மக்களின் வாழ்வியல் குறித்த குறும்படத்தின் முன்னோட்டம், எழுத்தாளர் நாறும்பூநாதன் எழுதிய ‘திருநெல்வேலி நீர், நிலம், மனிதர்கள்’ என்ற நூல் ஆகிய வற்றை அமைச்சர் வெளியிட்டார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு பின் மாவட்ட கலை மன்றம் மீண்டும் தொடங்கப் பட்டுள்ளது. இதன்மூலம் கலைகள், கலைஞர்களுக்கு முன்னுரிமை அளித்து கவுரவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கலைமன்ற தொடக்க விழாவில் எருது கட்டு மேளம், பரதவர் களியல் ஆகிய நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் வாழும் காணி மக்களின் வாழ்க்கை முறையை வெளிப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் குறும்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதற் கான முன்னோட்ட காட்சிகள் திரையிடப்பட்டன.

நிகழ்ச்சியில் பங்கேற்ற கிராமிய கலைஞர்களுக்கு தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். பாளையங்கோட்டை சட்டப் பேரவை உறுப்பினர் மு. அப்துல் வகாப், மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு, வருவாய் அலுவலர் அ.பெருமாள், துணை ஆட்சியர் (பயிற்சி) மகாலட்சுமி, வட்டாட்சியர் செல்வன், காப்பாட்சியர் சிவசத்தியவள்ளி, கலை பாண்பாட்டு துறை உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x