Published : 29 Dec 2021 05:29 AM
Last Updated : 29 Dec 2021 05:29 AM

மீனவர்களின் வாரிசுகளுக்கு 3 மாதம் வழிகாட்டுதல் பயிற்சி: கடலோர பாதுகாப்பு குழுமம் நடத்துகிறது

தமிழக மீனவர்களின் வாரிசுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்கள் இந்திய கடலோரக் காவல் படை மற்றும் இந்திய கப்பற்படையில் நவிக் (பொது) மற்றும்மாலுமி பணிகளிலும், இதர தேசியபாதுகாப்பு பணிகளிலும் சேருவதற்கு ஏதுவாக (வழிகாட்டுதல்) இலவச சிறப்புப் பயிற்சி வகுப்புகள், தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மூலம் நடத்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, கடலோர பாதுகாப்பு குழுமத்தால் நடத்தப்படவுள்ள 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள தகுதியுள்ள மீனவர்களின் வாரிசுகளிடம் இருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட கடலோர மாவட்ட மீன்வளத்துறை அலுவலகங்களில் இருந்தும், கடலோர பாதுகாப்பு குழும அலுவலகங்களில் இருந்தும், மீனவ கிராம கூட்டுறவு சங்கங்கள், நியாயவிலைக் கடைகள்ஆகிய இடங்களில் இருந்தும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மேலும், https://drive.google.com/drive/folders/ என்ற இணையதள முகவரியில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பயிற்சி வகுப்புகள் ஜனவரி பிற்பகுதியில் தொடங்கி 3 மாதங்களுக்கு கடலூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் நடத்தப்படும். தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு தங்குமிடம்,உணவு, பயிற்சி கையேடுகள் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியாளர்களுக்கு 3 மாதங்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.

இதில் சேர விரும்புபவர்கள் 12-ம் வகுப்புத் தேர்வில் மொத்த பாடங்களின் கூட்டுத்தொகையில் 50 சதவீதத்துக்கு மேலாகவும், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் தனித்தனியாக 50 சதவீதத்துக்கு மேலாகவும் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், உரிய உடற்கூறு தகுதிகளும் பெற்றிருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x