Published : 29 Dec 2021 05:23 AM
Last Updated : 29 Dec 2021 05:23 AM

ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்களை மீட்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: அரசு துறைகளுக்கு உயர் நீதின்றம் உத்தரவு

சென்னை

ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கோயில் நிலத்தைக் கண்டறிந்து மீட்பதற்கு அரசு துறைகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

இதுதொடர்பாக திருத்தொண்டர்கள் சபைத் தலைவரான சேலம் ஏ.ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘சென்னை போரூர் அருகேநந்தம்பாக்கத்தில் உள்ள கோதண்டராமர் கோயிலுக்கு சொந்தமான 150 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் தங்களது பெயருக்கு மாற்றம் செய்து பலர் ஆக்கிரமித்து உள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் நிர்வாகஆணையருக்கு புகார் அளித்தும்எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அந்த நிலத்தைமீட்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கை அடிப்படையில், வருவாய்த் துறை ஆவணங்களும், நில உரிமையாளர் எனஉரிமை கோருவோரின் ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும், இப்பணிகளை முடித்து நிலங்களை மீட்பதற்கு கால அவகாசம் தேவை, என அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதி தனதுஉத்தரவில், ‘‘கோயில் நில அபகரிப்பாளர்கள் மீது சட்டத்துக்குட்பட்டு நடவடிக்கை எடுப்பதற்கு தமிழகஅரசின் வருவாய் துறை, அறநிலையத் துறை, உள்துறை ஆகியவைஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதன்படி, கோதண்டராமர் கோயில் நில விவகாரத்தில் சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளின் கூட்டத்தை 6 வாரத்தில் கூட்டி தகுந்த முடிவெடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் கோயில்நிலங்களை மீட்பதற்கு சட்டப்படியான நடவடிக்கைகளை துரிதமாகஎடுக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x