

தேர்தலில் வாக்களிக்காமல் யாரும் விடுபடக்கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகி றது. அதன்படி, முதல் முறையாக தேர்தல் பொருட்களை எடுத்துச் செல்லும் லாரிகளின் ஓட்டுநர்கள், கிளீனர்களுக்கு தபால் வாக்கு அளிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த வசதி தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ள போலீஸாருக்கு ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது.
சுமார் 10 வாக்குச்சாவடிகளுக்கு ஒரு மண்டல குழு அமைக்கப்படும். இந்த குழுவினர் தேர்தலுக்கு முந்தைய நாள் முதல் தங்கள் பணிகளில் ஈடுபடுவார்கள். வாக்குப் பதிவுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு பொருட் களை லாரிகள் மூலம் சம்பந்தப்பட்ட வாக்குக் சாவடிகளுக்கு கொண்டு செல்வார்கள். அதுபோல வாக்குப் பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட பொருட்களை லாரிகள் மூலம் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு சேர்ப்பார்கள்.
129 மண்டல குழுக்கள்
இந்த முறை வாக்குப்பதிவு பொருட்களை கொண்டு செல்லும் லாரிகளின் ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்களுக்கு தபால் வாக்கு வசதி அளிக்கப்படுகிறது. தூத்துக் குடி மாவட்டத்தில் மட்டும் 129 மண்டல குழுக்கள் உள்ளன. எனவே, 129 லாரி ஓட்டுநர்கள், 129 கிளீனர்கள் இதன் மூலம் தபால் வாக்குரிமை பெறுவார்கள்.
தேர்தல் பணியில் ஈடுபடும் லாரி ஓட்டுநர்கள், கிளீனர்கள் குறித்த விபரங்களை அளித்து, அவர்கள் தபால் வாக்களிப்பதை ஒருங்கிணைக்க ஒவ்வொரு மாவட் டத்துக்கும் வட்டார போக்குவரத்து அலுவலக ஆய்வாளர் ஒருவரை நோடல் அதிகாரியாக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட் பாளர் பட்டியல் இறுதி செய்யப் பட்டதும், அவர்களுக்கு தபால் வாக்கு சீட்டு வழங்கப்படும். அந்த சீட்டில் அவர்கள் பணிக்கு செல்வதற்கு முன்பே வாக்களித்து, அதற்கான பெட்டியில் போட வேண்டும்.
இதன் மூலம் அவர்களது வாக்கு பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.