Published : 27 Dec 2021 12:40 PM
Last Updated : 27 Dec 2021 12:40 PM

புத்தகங்களே வாழ்க்கையில் நல்ல பாடத்தை கற்றுத்தரும்; வீடு கட்டும்போது புத்தக அறை அவசியம்: கிராமம் தோறும் நூலகம் அமைக்க ஆளுநர் அறிவுறுத்தல்

புதுச்சேரி தேசிய புத்தகக் கண்காட்சி நிறைவு நாள் விழாவில் ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் புத்தகக் கண்காட்சியின் வெள்ளி விழா மலரை வெளியிட்டனர்.

புதுச்சேரி: வீடு கட்டும்போது வீட்டில் புத்தக அறை கட்ட வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவு றுத்தினார்.

புதுச்சேரி எழுத்தாளர்கள் புத்தகச் சங்கம் சார்பில் வேல் சொக்கநாதன் திருமண மண்டபத்தில் 25-வது தேசிய புத்தகக் கண்காட்சிகடந்த 17-ம் தேதி தொடங்கியது.இதில் பல்வேறு மாநிலங்களிலி ருந்து 70 புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் அரங்குகள் அமைக்கப்பட்டன. 'இந்து தமிழ் திசை' அரங்கும் அமைக்கப்பட்டிருந்தது. 60 ஆயிரத் துக்கும் மேற்பட்ட தலைப்புகளில், பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன.

கண்காட்சியின் நிறைவு நாளான நேற்று கண்காட்சியின் வெள்ளி விழா நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டார்.முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கினார். புத்தகக் கண்காட்சியின் 25 ஆண்டுகள் புகைப்படங்கள் அடங்கிய ஆல்பத்தை வெளியிட் டனர். வெள்ளி விழா புத்தக கண் காட்சி குழுவின் தலைவர் முத்து வரவேற்றார். சிறப்பு தலைவர் பாஞ்.ராமலிங்கம் நோக்கவுரை ஆற்றினார்.

நிகழ்வில் ஆளுநர் தமிழிசை பேசுகையில், “புத்தகங்களே வாழ்க்கையில் நல்ல பாடத்தை கற்றுத் தரும். பாடப் புத்தகங்களின் வாசிப்பு மதிப்பை பெற்றுத் தரும். வாசிப்புதான் என்னை பண் படுத்துகிறது.

படிக்கப் படிக்கத்தான் வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகளுக்கு பதில் கிடைக்கும். ஒவ்வொருவரும் வீடு கட்டும்போது வீட்டில் புத்தக அறை கட்ட வேண்டும். அதற்கு வசதி இல்லாதவர்கள் வாசிப்பதற்கு சிறிய இடத்தையாவது ஒதுக்கிக் கொள்ள வேண்டும். குழந்தைகள் புத்தகங்களை படித்து கதை சொல்ல ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் அவர்களின் பேச்சாற்றல் வளரும். புதுச்சேரியில் கிராமம் தோறும் நூலகம் அமைக்க வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

முதல்வர் ரங்கசாமி பேசும் போது, “புத்தகம் வாசிப்பது நல்லபழக்கம். நல்ல நூல்களை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். தொழில்நுட்பம் வளர்ந்தாலும் நல்ல நூல் களை படிப்பது நல்ல சிந்தனையை கொடுக்கும். மாணவர்களுக்கு புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். வீட்டில் புத்தகங்களை கொடுத்து படிக்கச்சொல்ல வேண்டும். இதனை புத்தககண்காட்சிகள் நிறைவேற்று கின்றன” என்று தெரிவித்தார்.

விருது வழங்கல்

வெள்ளிவிழா தேசிய புத்தகக் கண்காட்சியையொட்டி பல ஆண்டுகளாக பங்கேற்கும் 'இந்து தமிழ் திசை' உட்பட பல்வேறு புத்தகநிறுவனங்களுக்கு `புத்தக சேவா' விருதுகளும், தொடர்ந்து ஆதரவு அளித்து கண்காட்சி சிறப்பாக நடைபெற ஒத்துழைத்தவர்களுக்கு 'புத்தக சேவா ரத்னா' விருதுகளும் வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x