

சிவகங்கை அருகே கிராமப்புற மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவையோடு, கல்வி கட்டணத்தையும் தனியார் பள்ளி ரத்து செய்தது.
சிவகங்கை அருகே ஒக்கூரில் சோமசுந்தரம் செட்டியார் மேல்நிலைப் பள்ளி உள்ளது. அரசு உதவி பெறும் இப்பள்ளி 1952-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதலில் தொடக்கப் பள்ளியாகவும், பிறகு படிப்படியாக தரம் உயர்த்தப் பட்டது. 1999-ம் ஆண்டு சுயநிதி பிரிவாக பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு கள் தொடங்கப்பட்டன.
தற்போது பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளில் 160-க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். ஆறு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இப்பள்ளியில் சுற்றுப்பகுதிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மாணவர்கள் படிக்கின்றனர். அவர்கள் பள்ளிக் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்ததை அடுத்து, 2019-ல் இருந்து கல்விக் கட்ட ணத்தை பள்ளி நிர்வாகம் ரத்து செய்தது. மேலும் மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல இலவச பேருந்து சேவையும் வழங்கி வருகிறது. இதுகுறித்து ஆசிரி யர்கள் கூறியதாவது: இப் பள்ளியை நிறுவனரின் பேரன் சோமசுந்தரம் நிர்வகித்து வரு கிறார். அவர் மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று கூறிவிட்டார். மேலும் அவரே சொந்த பணத்தில் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதோடு, பள்ளி வாகனத்தையும் இலவசமாக இயக்க அறிவுறுத்தி யுள்ளார் என்றனர்.