Last Updated : 31 Mar, 2016 08:17 AM

 

Published : 31 Mar 2016 08:17 AM
Last Updated : 31 Mar 2016 08:17 AM

முதல்முறை வாக்காளர்களுக்கு பிரதமர் மோடியின் ஒரு கோடி கடிதம்: பாஜக திட்டம்

தமிழத்தில் முதல்முறை வாக்காளர் கள் 1 கோடி பேருக்கு பிரதமர் நரேந்திர மோடியின் கடிதத்தை தனித் தனியாக அனுப்ப பாஜக திட்ட மிட்டுள்ளது.

கூட்டணி முயற்சி பலனளிக்காத நிலையில், 234 தொகுதிகளிலும் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. இதைத் தொடர்ந்து கடந்த 25-ம் தேதி 54 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. தேர்தலில் கணிசமான வாக்குகளை பெறுவதற்காக பாஜக பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.

தேர்தல் பணிகளுக்காக சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு அருகில் தனி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை காங்கிரஸ் பிரமுகரும், திரைப்படத் தயாரிப்பாள ருமான முக்தா சீனிவாசன் இலவச மாக கொடுத்துள்ளார்.

பிரச்சாரத் திட்டங்கள், துண்டு பிரசு ரங்கள், போஸ்டர்கள், தாமரைச் சின்னம், பிரதமர் மோடி உருவம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள், சாவிக் கொத்துகள் என தேர்த லுக்கு தேவையான அனைத்தும் இங்கிருந்துதான் 234 தொகுதி களுக்கும் அனுப்பப்படுகின்றன. முதல் தவணையாக அனைத்து தொகுதிகளுக்கும் ஒரு கோடி துண்டுப் பிரசுரங்கள் அனுப்பப் பட்டுள்ளன. அமைப்பு பொதுச்செய லாளர் கேசவ விநாயகம் கட்டுப் பாட்டில் இயங்கும் இந்த அலுவல கத்தின் பொறுப்பாளர்களாக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நியமிக்கப் பட்டுள்ளனர்.

50 குழுக்கள்

தேர்தலுக்காக 234 தொகுதி களுக்கும் 500-க்கும் அதிகமான முழுநேர ஊழியர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். இவர்களையும் இந்த அலுவலகம்தான் இயக்கி வருகிறது. வாக்குச் சாவடி குழு அமைத்தல், தேர்தல் அறிக்கை தயாரிப்பு, தேர்தல் நிதி வசூல், பிரச்சார பாடல்கள், துண்டுப் பிரசுரங்கள், போஸ்டர்கள் தயாரிப்பு, சமூக ஊடகங்களில் பிரச்சாரம் என தனித்தனியாக சுமார் 50 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் தினமும் ஆலோசனை நடத்தி வருகின்றன.

தமிழகத்தில் கடந்த 20-ம் தேதி வெளியான இறுதி வாக்காளர் பட்டியலின்படி 1 கோடியே 6 லட்சத்து 88 ஆயிரத்து 586 முதல் முறை வாக்காளர்கள் உள்ளனர். இவர்களை குறிவைத்து பிரச்சாரம் செய்ய பாஜக திட்டமிட்டு வருகிறது. இதற்காக முகநூல், டுவிட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்ய தொழில்நுட்ப நிபுணர்கள், ஓவியர்கள், எழுத்தாளர், வடிவமைப்பாளர்களைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர முதல்முறை வாக் காளர்கள் ஒரு கோடி பேருக்கும் ‘பாஜகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்’ என்பதை வலியுறுத்தி பிரதமர் மோடி எழுதும் கடிதத்தை தனித்தனியாக அனுப்ப பாஜக தேர்தல் குழு திட்டமிட்டுள்ளது. பிரதமர் மோடி தொலைபேசியில் பேசு வதுபோல அவரது குரல் பதிவை அனுப்பவும் திட்டமிட்டுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர் அத்வானி, பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் சிவராஜ் சிங் சவுகான் (மத்தியப்பிரதேசம்), வசுந்தரா ராஜே சிந்தியா (ராஜஸ்தான்) ஆனந்தி பென் பட்டேல் (குஜராத்), ரமண் சிங் (சத்தீஸ்கர்), மனோகர்லால் கட்டா (ஹரியாணா) மத்திய அமைச் சர்கள் அருண் ஜேட்லி, நிதின் கட்கரி, வெங்கய்ய நாயுடு, மனோ கர் பாரிக்கர், பியூஸ் கோயல் உள் ளிட்டோரும் தமிழகத்தில் பிரச்சாரம் செய்யவுள்ளனர். இவர்களுக்கான பிரச்சாரத் திட்டத்தையும் பாஜக தேர்தல் குழு தயாரித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x