

பிரஸல்ஸ் தற்கொலைப் படை தாக்குதல் சம்பவத்தில் தமிழக சாப்ட்வேர் இன்ஜினீயர் ராகவேந்திரா கணேசன் உயிரிழந்தார்.
அவரது குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
"கொடூரமான வன்முறையால் நம்பிக்கையோடும், கனவுகளுடனும் வாழ்ந்த இளைஞரின் உயிர் பறிக்கப்பட்டு விட்டது" என பிரதமர் மோடி தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இதேபோல் தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது இரங்கல் குறிப்பில், "தமிழகத்தைச் சேர்ந்த ராகவேந்திரா கணேசன் பிரஸல்ஸ் நாட்டில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தார் என்ற செய்தி வேதனையளிக்கிறது. அவரது மறைவு அவரது குடும்பத்தாருக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. இத்துயரமான தருணத்தில் அவரது குடும்பத்தாருக்காக நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். உலக நாடுகள் பலவற்றில் பணியாற்றும் தமிழர்கள் பலரின் கடின உழைப்பையும், உத்வேகத்தையும் உருவகப்படுத்தும் பிம்பமாக ராகவேந்திரா கணேசன் என்றும் நிலைத்திருப்பார்" எனத் தெரிவித்துள்ளார்.