Published : 25 Dec 2021 09:51 AM
Last Updated : 25 Dec 2021 09:51 AM

‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தில் 3 நாட்களில் ரூ.24 லட்சம் செலவிடப்பட்டுள்ளது: நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் தகவல்

உளுந்தூர்பேட்டை தொகுதியில் பயனாளி ஒருவருக்கு அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கும் அமைச்சர் எ.வ.வேலு.

கள்ளக்குறிச்சி

`இன்னுயிர் காப்போம் - நம்மைகாக்கும் 48' திட்டத்தில் 3 நாட்களில்ரூ.24 லட்சம் செலவிடப்பட்டுள் ளதாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி, உளுந்தூர் பேட்டை, சங்கராபுரம் மற்றும் ரிஷவந்தியம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட 77,916 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்), நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அமைச்சர் எ.வ.வேலு, மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் முன்னிலையில் நேற்று முன் தினம் வழங்கினார். அப்போது அவர் பேசியது:

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத்தொகுதியில் 68,876 பயனாளிகளுக்கு ரூ.192,49,84,908 மதிப் பீட்டிலும், உளுந்தூர்பேட்டை தொகுதியில் 2,508 பயனாளிகளுக்கு ரூ.62,91,05,940 மதிப்பீட்டி லும், சங்கராபுரம் தொகுதியில் 3,071 பயனாளிகளுக்கு ரூ.77,06,71,485 மதிப்பீட்டிலும், ரிஷிவந்தியம் தொகுதியில் 3,453பயனாளிகளுக்கு ரூ.91,70,52,452 மதிப்பீட்டிலும் என மொத்தம் 77,916பயனாளிகளுக்கு ரூ.424.18 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் விபத்து நிகழ்வ தற்கான காரணம் குறித்து முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தின் விளைவாக, `இன்னுயிர் காப்போம் - நம்மைகாக்கும் 48' திட்டம் ஏற்படுத்தப் பட்டது.

இதனை தமிழக முதல்வர் மேல்மருவத்தூரில் தொடங்கி வைத்தார், இத்திட்டத்தின்கீழ் விபத்து நடைபெற்ற 48 மணி நேரத்தில் சிகிச்சைக்காக மேற் கொள்ளப்படும் அனைத்து செலவி னங்களும் அரசே ஏற்கிறது. இத்திட்டத்தின்கீழ் 3 நாட்களில் மட்டும் சுமார் 24 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்றார்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பெ.புவ னேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் சி.விஜய்பாபு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரா.மணி, வரு வாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் அனைத்துத் துறை அரசுஉயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x