

தனியாருக்கு ஆதரவாக அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று பிஆர்டிசி ஊழியர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் சங்க பொதுச் செயலா ளர் வேலய்யன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிஆர்டிசியில் 46 நகரபேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை அனைத்து கிராமங்களுக் கும் சென்று வருகின்றன. தனியார் பேருந்து வழித்தடத்திலும் இயக் கப்படுகிறது.
இவற்றுக்கு நேரம் போடும் அதிகாரிகள் தனியாருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். கோரிமேடு செல்ல வேண்டிய பேருந்துகள் எதுவும் இயக்கப் படவில்லை.
தனியாரிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு இந்த வழித்தடத்தில் பேருந்துகளை இயக்குவதில்லை. இது வட்டார போக்குவரத்து அலுவலருக்கும் தெரியும். தனியார் பேருந்துகள் எந்த நேர கட்டுப்பாடும் இல்லாமல் கோரிமேட்டுக்கு இயக் கப்படுகின்றன. ஜிப்மர் செல்லும் பலர் அவதியடைகின்றனர்.
பிஆர்டிசி பேருந்துகள் பணி மனையில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலாண் இயக்குநர் இந்த பேருந்துகளை இயக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் ஆளுநர், முதல்வர் அமைச்சர், துறை செயலர் தலையிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
பிஆர்டிசி பேருந்துகள் பணி மனையில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலாண் இயக்குநர் இந்த பேருந்துகளை இயக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.