Published : 07 Mar 2016 08:16 AM
Last Updated : 07 Mar 2016 08:16 AM

விஜயகாந்துக்காக அனைவரும் காத்திருப்பது ஏன்? - தமிழருவி மணியன் விளக்கம்

விஜயகாந்துடன் கூட்டணி சேர்ந்தால் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்ற கனவில் திமுகவும், தங்களின் வாக்கு சதவீதத்தை அதிகரித்துக் காட்டலாம் என்ற ஆசையில் பாஜகவும், மக்கள் நலக் கூட்டணியும் காத்திருப்பதாக தமிழருவி மணியன் கூறினார்.

காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதா வது:

கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் நேர்காணலின்போது அவர் என்ன சாதி? எவ்வளவு பணம் உள்ளது? என்று பார்க்கிறார்களே தவிர, அவரது நேர்மை, கடந்த கால அரசியல் வாழ்க்கையை பார்ப்பதில்லை.

வாக்காளர் பட்டியலில் தற்போது புதியதாக 30 லட்சம் இளைஞர்கள் சேர்ந்துள்ளனர். அவர்களது ஆதரவு எங்களுக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். 2016 சட்டப்பேரவைத் தேர்தல் எங்கள் இலக்கு அல்ல. 2021 தான் எங்கள் இலக்கு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 தொகுதிகளில் காந்திய மக்கள் கட்சி போட்டியிடுகிறது.

நாகர்கோவிலில் கதிரேசன், குளச்சலில் வழக்கறிஞர் ஆனந்த், பத்மநாபபுரத்தில் வழக்கறிஞர் ஜெயக்குமார் போட்டியிட உள்ள னர். மொத்தம் 26 தொகுதி களுக்கான வேட்பாளர்களை அறி வித்துள்ளோம். மீதமுள்ள தொகுதி களில் அப்துல்கலாம் லட்சிய இந்திய கட்சி மற்றும் எங்கள் கூட்டணியில் சேரும் கட்சிகள் போட்டியிடும்.

மக்கள் நலக் கூட்டணி

மக்கள் நலக் கூட்டணியுடன் எங்க ளுக்கு கருத்துவேறுபாடு கிடையாது. தமிழகத்தில் மாற்று அரசு உருவாக வேண்டும். திராவிடக் கட்சிகளிடம் இருந்து தமிழகம் விடுபட வேண்டும் என்று நாங்கள் குரல் கொடுக்கிறோம்.

மக்கள் நலக் கூட்டணிக்கு விஜயகாந்த் வருவார் என்று வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். திமுக, அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகளி டம் இருந்து மாறுபட்ட கொள்கை விஜயகாந்திடம் இல்லை. இதுபற்றி வைகோ விளக்கம் அளிக்க வேண் டும். பாட்டாளி மக்கள் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்திருப் பது அவர்களது தைரியத்தை காட்டுகிறது.

தேமுதிக யாருடன் கூட்டணி சேருகிறதோ, அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்ற மாயையை உருவாக்கி உள்ளனர். விஜயகாந்த் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டுத் தன் பலத்தை நிரூபிக்க வேண்டும். விஜயகாந்தால் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

விஜயகாந்துக்கு 2011 ல் 8 சத வீதம் வாக்கு வங்கி இருந்தது. அது, 2014 ல் 5 சதவீதமாக குறைந்து விட்டது. அது மேலும் குறைய வாய்ப்பு ள்ளது. அதேபோன்று, அதிமுகவின் பலமும் தற்போது குறைந்துள்ளது.

அதிமுகவுக்கு 34.5 சதவீதம் வாக்கு வங்கி உள்ளதாகவும், திமுக வுக்கு 33 சதவீதம் வாக்கு உள்ளதாக வும் கருத்துக்கணிப்புகள் கூறியுள் ளன. விஜயகாந்த் வாக்குகளையும் பெற்றால் வெற்றி பெற்றுவிடலாம் என்று திமுக கணக்கு போட்டுள்ளது.

பாஜகவுக்கு 3 சதவீத வாக்குகளே உள்ளன. தனித்து நின்றால் அந்த கட்சி டெபாசிட் இழந்துவிடும். எனவே, விஜயகாந்த்தை தங்கள் அணியில் சேர்த்து வாக்கு சதவீதத்தை அதிக ரித்துக்காட்ட பாஜக முயற்சிக்கிறது. அதேபோல், மக்கள் நலக் கூட்டணி யும் விஜயகாந்த்தை தங்களுடன் சேர்த்து, வாக்கு சதவீதத்தை அதிகரிக்க முயற்சிக்கிறது.

திமுகவுக்கு முடிவு

திமுக, அதிமுகவுடன் எனக்கு பகையோ, பாசமோ கிடையாது. திமுக இனி எழக்கூடாது. திமுக, அதிமுக ஆகிய இரு கட்சியினரும், ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி ஆட்சிக்கு வருகிறார்கள். திமுக தற்போது முடியும் நிலையில் உள்ளது. இப்படி கூறுவதால் நான் அதிமுக அனுதாபி இல்லை.

ராஜீவ் காந்தி கொலைக் குற்ற வாளிகள் 7 பேர், கடந்த 24 ஆண்டு களாக சிறையில் உள்ளதால் மனித நேயத்துடன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு தமிழருவி மணியன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x