

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி முதல் நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது.
பிப்ரவரி 28, 29, மார்ச் 1 ஆகிய 3 நாட்கள் நேர்காணல் நடக்கவில்லை. கடந்த 2-ம் தேதி முதல் மீண்டும் நேர் காணல் தொடங்கி நடந்து வருகிறது. பத்தாவது நாளான நேற்று வேலூர், காஞ்சி புரம் மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளுக்கான நேர்காணல் நடந்தது. இதுவரை 30 மாவட்டங்களில் உள்ள 218 தொகுதிகளுக்கான நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இன்று நேர்காணல் இல்லை. நாளை (7-ம் தேதி) திருவள்ளூர், சென்னை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களுக்கான நேர் காணல் நடைபெறவுள்ளது. நாளையுடன் நேர்காணல் நிறைவு பெறுகிறது.