பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு

பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு
Updated on
1 min read

திருப்பத்துார் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த பேரறிவாளன், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்ட பேரறிவாளனை வீட்டில் வைத்து சிகிச்சையளிக்க வேண்டும் என்பதால் பேரறிவாளனுக்கு பரோல் வழங்க வேண்டுமென அவரது தாய் அற்புதம்மாள், தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார். அதனடிப்படையில், பேரறிவாளனுக்கு கடந்த மே மாதம் 28-ம் தேதி ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. மேலும், பேரறிவாளன் தொடர் சிகிச்சையில் இருப்பதால் ஒவ்வொரு மாதமும் அவருக்கு பரோல் நீட்டிக்கப்பட்டுவந்த நிலையில் நேற்று ஒரு மாதம் என 8-வதுமுறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in