

சென்னை: ஒமைக்ரான் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடந்து வருகிறது.
முன்னதாக, தமிழகத்தில் 34 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். எனினும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் லேசான அறிகுறியே இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில் நாட்டிலேயே ஒமைக்ரான் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. எனவே ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவத் துறை வல்லுநர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படுமா? என்பது குறித்து ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே டிசம்பர் 31, ஜனவரி 1ஆம் தேதிகளில் கடற்கரைக் கொண்டாட்டங்களுக்குத் தமிழக அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.