

மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து, திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி சுற்றுவட்டாரத்தின் கிராமப் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி பிளஸ் 1 படித்து வந்தார். கடந்தஆண்டு நவம்பர் 11-ம் தேதி இரவுதனியாக இருந்த சிறுமியை, தந்தைபாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி மிரட்டவும் செய்துள்ளார். தனக்கு நடந்ததை தாயிடம் மகள் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அதே மாதம் 26-ம் தேதி கணவர் மீது அளித்த புகாரின்பேரில், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவிநாசி அனைத்து மகளிர் காவல் துறையினர் சிறுமியின் தந்தையை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். திருப்பூர் மாவட்டமகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இந்த வழக்கின் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்ததற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்கு 7 ஆண்டுகள் சிறை, ரூ. 10 ஆயிரம் அபராதம், சிறுமியை மிரட்டிய குற்றத்துக்கு 2 ஆண்டுகள்சிறை, 5 ஆயிரம் அபராதம் விதித்து,திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி சுகந்தி உத்தரவிட்டார்.