நாளுக்குநாள் அதிகரித்து வரும் குழந்தைகள் மீதான உரிமை மீறல்: நான்கு ஆண்டுகளில் 135 வழக்குகள் பதிவு

நாளுக்குநாள் அதிகரித்து வரும் குழந்தைகள் மீதான உரிமை மீறல்: நான்கு ஆண்டுகளில் 135 வழக்குகள் பதிவு
Updated on
1 min read

குழந்தைகள் மீதான உரிமை மீறல் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 2013 முதல் இதுவரை 135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்கும் சைல்டுலைன் அமைப்பின் ஐந்து ஆண்டு ஆய்வு, ஆலோசனைக் கூட்டம் விருதுநகரில் நேற்று நடைபெற்றது.

இதில் சைல்டுலைன் நிர்வாகிகள் மட்டுமின்றி குழந்தைகள் நலனு க்காக ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்புகள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் தலைமை வகித்து சைல்டுலைன் திட்ட இயக்குநர் ஜான்தேவவரம் பேசியதாவது:

மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டு களில் குழந்தைகள் மீதான வன் முறை புகார்கள், வழக்குப் பதிவு கள் அதிகரித்து வருகின்றன.

குழந்தைத் தொழிலாளர் முறை, குழந்தை திருமணம், பள்ளிக் குழந்தைகள் இடை நிற்றல், பாலியல் ரீதியான துன்புறுத்தல் களால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களிலும் அண்மையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 1,591 குழந்தைகள் பள்ளியில் இருந்து இடை நின்றது கண்டறியப்பட்டுள்ளது. மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிகமாகி வ ருகிறது. வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் 8, விருதுநகரில் 27, அருப்புக்கோட்டையில் 11, காரியாபட்டியில் 10, சிவகா சியில் 13, திருச்சுழியில் 5, திருவில்லிபுத்தூரில் 8, வத்திராயிருப்பில் 4, ராஜபாளையத்தில் 11, சாத்தூரில் 8 சதவீதங்களில் குழந்தைத் திருமண விகிதாசாரம் உள்ளது. இதேபோன்று, குழந்தைகள் மீதான வன்முறைகளும் அதிகரித்து வருகிறது. 2011-12ல் 94 வழக்குகளும், 2012-13ல் 238 வழக்குகளும், 2013-14ல் 260 வழக்குகளும், 2014-15ல் 394 வழக்குகளும், 2015-16ல் 345 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்கவும், குழந்தைத் திருமணங்களை நிறுத்தவும் ஒருங் கிணைந்த செயல்பாடு தேவை என்றார்.

குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் கார்த்திக் பேசிய தாவது: கிராம ஊராட்சிகளில் குழந்தை களின் உரிமைகளை பாதுகாக்க ஊராட்சித் தலைவர், ஆசிரியர்கள், 2 குழந்தைகள், மகளிர் குழு உறுப்பினர் என பல்வேறு தரப்பினர் கொண்ட 11 பேர் அடங்கிய கிராமக் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 2013-ல் 21 வழக்குகளும், 2014-ல் 34 வழக்குகளும், 2015-ல் 64 வழக்குகளும், 2016-ல் இதுவரை 16 வழக்குகளும் பாக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in