

விழுப்புரம்: பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் கல்யாணி என்ற பிரபா கல்விமணி விழுப்புரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
10 ஆண்டுகளுக்கு முன் (22.11.2011) திருக்கோவிலூர் அருகே திகே மண்டபம் பெருமாள் கோயில் மண்டபப்பாடியில் குடியிருக்கும் முருகன் - வள்ளி தம்பதியினரின் குடும்ப உறுப்பினர்கள் 15 பேரை காவல்துறையினர் கடத்தி, கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கினர். மேலும் 4 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள். ஆண்கள் மீது பல் வேறு பொய் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டனர்.
இது குறித்து வெளியான செய்திகளின் அடிப்படையில் தமிழ்நாடுமனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து பழங்குடியின மக்களுக்கு நேர்ந்த காவல்துறை அத்துமீறல் தொடர்பான விசாரணையை மேற்கொண்டது. கடந்த 21-ம் தேதி பாதிக்கப் பட்டவர்களுக்கு தலா ரூ. 5 லட் சம் வீதம் ரூ. 75 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டுள்ளது. மேலும், இதற்கு காரணமான காவலர்கள் மீது 3 மாதத்திற்குள் துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கின் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இதற்கு எங்களின்நன்றியை தெரிவித்துக்கொள் கிறோம்.
மேலும், சிறையில் அடைக்கப் பட்டுள்ள இருளர்கள் மீதான பொய் வழக்குகளை அரசு ரத்து செய்ய வேண்டும். சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நலிந்த பிரிவினர் மீது சுமத்தப்படும் பொய்வழக்குகளை முடிவு கட்ட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிதலைமையில் விசாரணை ஆணை யம் அமைக்க வேண்டும். பாதிக் கப்பட்ட பழங்குடி இருளர்களுக்கு சட்டரீதியாக உதவிகள் செய்து வரும் பிவி. ரமேஷ், முருகப்பன் ஆகியோர் மீது பதியப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற வேண் டும் என்று கூறினார்.