விழுப்புரத்தில் தள்ளுவண்டியில் கிடந்த உடல்... சிறுவனின் மர்ம மரணத்தில் திக்கித் திணறும் காவல்துறை

இதுவரையிலும் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ள இறந்த சிறுவனின் சடலம்.
இதுவரையிலும் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ள இறந்த சிறுவனின் சடலம்.
Updated on
2 min read

விழுப்புரத்தில் தள்ளுவண்டியில் கண்டெடுக்கப்பட்ட சிறுவனின் உடல் அடையாளம் காணப்படுவ தில் தொடர்ந்து சிக்கல் நிலவுகிறது. சிறுவனின் மர்ம மரணம் தொடர் பான விசாரணையில் காவல் துறையினர் தீவிரம் காட்டி வந்தாலும், இதுவரையில் யாரும் சிக்கவில்லை.

விழுப்புரத்தில், சென்னை நெடுஞ்சாலையில் மேல்தெரு பகுதியில் கடந்த 15-ம் தேதி இஸ்திரி செய்யும் தள்ளுவண்டியில் 4 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் மர்மமான முறையில் இறந்து கிடந்தான்.விழுப்புரம் மேற்கு காவல் நிலையபோலீஸார் சிறுவனின் உடலைகைப்பற்றி, பிரேத பரிசோத னைக்காக முண்டியம்பாக்கம் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை யில், சிறுவன் இயற்கையாக இறந் ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சிறுவனின் உணவுக் குழாயில் 2 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாததால் அவன் உண வின்றி இறந்திருப்பதும் தெரிய வந்தது. அந்தச் சிறுவன் யார், எந்த ஊரைச் சேர்ந்தவன், அவனது பெற்றோர் யார் என தனிப்படை போலீஸார் தொடர்ந்து தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் நகரில் உள்ள அனைத்து சி.சி.டி.வி. கேமராக் களின் பதிவுகள் மற்றும் மாவட்ட எல்லைப் பகுதியில் குறிப்பிட்ட நாட்களில் பதிவாகியுள்ள கேமரா பதிவுகளை போலீஸார் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

இதில். 14-ம் தேதியன்று நள்ளிரவு, விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், அந்த சிறுவனின் மீது துணியால் மூடியபடி சிறுவனை தனது தோளில்சுமந்தபடி நடந்து செல்வதும், அந்த நபருடன் சுமார் 55 வயது மதிக்கத்தக்க மற்றொரு நபர் உடன் செல்வதும் பதிவாகியுள்ளது.

மேலும் அவர்கள் மேல்தெரு பகுதி சென்றதும் அங்குள்ள தள்ளுவண்டியில் துண்டை விரித்து அதன் மீது அந்தச் சிறுவனை படுக்க வைத்துவிட்டு பின்னர் மீண்டும் அவர்கள் இருவரும் அங்கிருந்து நடந்தே புதிய பேருந்து நிலையம் வந்து, ஒரு பேருந்தில் ஏறிச் சென்றதும் சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகியுள்ளது. இருவரும் இரவு நேரத்தில் வந்ததால் அவர்களது முகம்,தெளிவாக பதியவில்லை.

மேலும் சிறுவனின் சட்டை காலரில் ‘ஐசிடிஎஸ்’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இதைத் கொண்டு அங்கன்வாடி மையங் கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காணாமல் போன குழந்தை களின் விவரத்தை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.

இது குறித்து எஸ்பி நாதா கூறுகையில், “விழுப்புரம் மாவட் டம் மட்டுமின்றி பக்கத்து மாவட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் வாட்ஸ்-அப் குழுக்களுக்கும் சிறுவன் குறித்த விவரங்கள் அனுப்பப்பட்டு, ஏதேனும் தகவல் தெரிந்தால்தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள் ளோம். விரைவில் சிறுவன் பற்றிய முழு விவரத்தையும் கண்டுபிடித்து விடுவோம்” என்றார்.

மேலும் இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் கேட்ட போது, “14-ம் தேதி நள்ளிரவு விழுப்புரம் பேருந்து நிலையத்திற்கு வந்து சென்ற 30 பேருந்துகளின் ஓட்டுநர்கள், நடத்துநர்களிடம் விசாரணைநடத்தி வருகிறோம். விசார ணையை திசை திருப்ப, சிறுவனின் உடையை கூட திட்டமிட்டு மாற்றி அணிவித்து இருக்கலாமோ என்ற சந்தேகம் உள்ளது” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in