Published : 09 Mar 2016 08:23 AM
Last Updated : 09 Mar 2016 08:23 AM

தேர்தல் விதிமீறல் புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்கள் வெளியீடு: தொகுதி அலுவலரிடமும் புகார் கூறலாம்

காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்த புகார்களை தெரிவிக்க கட்டணில்லா தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மே 16-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க வசதியாக 044-27238088 மற்றும் 1800-425-1214 என்ற இலவச தொலைபேசி எண்களும், புகார்களை குறுஞ்செய்திகளாக தெரிவிக்க 8903961950 என்ற தொலைபேசி எண்ணையும் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி வெளியிட்டார்.

இந்த எண்கள் மூலம் தெரிவிக்கப்படும் புகார்களின் மீது 24 மணி நேரத்தில் விசாரித்து வழக்கு பதிவு செய்யப்படும் என மாவட்ட தேர்தல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளின் தேர்தல் அலுவலர்கள் மற்றும் அவர்களது தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.

ஆலந்தூர்-ராஜேந்திரன் 9952545032, ஸ்ரீபெரும்புதூர் - பாரி 9442261157, பல்லாவரம் - விஸ்வநாதன் 9442695968, தாம்பரம் விமல்ராஜ் 9578635520, செங்கல்பட்டு - பன்னீர் செல்வம் 9445000414, திருப்போரூர் - கோவிந்தராசு 9445477826, செய்யூர் - ஜெயக்குமார் 94454 61737, மதுராந்தகம் - பர்கத்பேகம் 9445000415, உத்திரமேரூர் - பவனந்தி 9445000168, காஞ்சிபுரம் - அருண்தம்புராஜ் 9445000413, சோழிங்கநல்லூர் - செந்திவேல் 7598640434 ஆகியோர் தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படை மற்றும் சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதிகளுக்கும் தலா ஒரு வீடியோக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பதிவு செய்யும் காட்சிகளை பார்ப்பதற்காக அந்தந்த தொகு தியில் தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் படக்காட்சி குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. பணிகளில் 20 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் கூறினார். இதே போன்று திருவள்ளூர் மாவட் டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை 1800-425-7013 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x