

கோவில்பட்டியில் கடம்பூர் செ.ராஜு எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராகத் தான் இருக்கிறார். உயர்நீதிமன்ற தடையை நீக்க அவர் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார். அந்த தீர்ப்பு வரும்வரை காத்திருக்கலாம். மற்ற வழக்குகளில் காவல்துறை இவ்வளவு வேகமாக செயல்படுகிறதா?.
இந்த ஆட்சி வந்தால் மாற்றம் வரும் என்று நம்பி வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என்பதற்கு பொங்கல் பரிசு ஒரு உதாரணம். கடந்த ஆண்டு நாங்கள் பொங்கல் பரிசு பையுடன் ரூ.2,500 கொடுத்தோம். ஆனால் இன்றைக்கு வெறும் பொங்கல் பரிசு பையை மட்டும் கொடுக்க உள்ளனர். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த பின்னர் மக்களை ஏமாற்றுவது திமுகவுக்கு வாடிக்கை, என்றார்.