பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு 4 சிறப்பு ரயில்கள் இயக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு 4 சிறப்பு ரயில்கள் இயக்கம்
Updated on
1 min read

சென்னை: பொங்கலையொட்டி சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு மொத்தம் 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகவுள்ளது.

அதன்படி, தாம்பரத்தில் இருந்துவரும் ஜன.12-ம் தேதி இரவு 9.45மணிக்கு புறப்படும் அதிவிரைவுசிறப்பு ரயில் (06001) மறுநாள்காலை 8.15 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். மறுமார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து வரும் 13-ம் தேதி இரவு 9.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06002) மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும். சென்னை எழும்பூரில் இருந்து வரும் 13-ம் தேதி மாலை 3.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06005) மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து வரும் 14-ம் தேதி மாலை 3.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06006) மறுநாள் காலை 5.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

இதேபோல், நாகர்கோவிலில் இருந்து வரும் 16-ம் தேதி மாலை4.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06004) மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து வரும் 17-ம் தேதி மாலை 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06005) மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு நாகர்கோவில் செல்லும். திருநெல்வேலியில் இருந்து வரும் 16-ம் தேதி இரவு 7 மணிக்குபுறப்படும் சிறப்பு ரயில் (06040) மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து வரும் 17-ம் தேதிகாலை 10.45 மணிக்கு புறப்படும்சிறப்பு ரயில் (06039) அதேநாளில் இரவு 10.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

மேற்கண்ட சிறப்பு ரயில் விபரம்,முன்பதிவு குறித்து தெற்கு ரயில்வே விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in