

சென்னை: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றிய பொன்.மாணிக்கவேல் மீது குற்றம் சாட்டி, சென்னை கொரட்டூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் சேகர்ராம் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, போலி பத்திரிகையாளர்களை களையெடுக்கும் வகையில், உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் மூத்த பத்திரிகையாளர்கள், அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் அடங்கிய ‘தமிழ்நாடு பிரஸ் கவுன்சில்’ என்ற அமைப்பை மாநில அளவில் 3 மாதங்களில் ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டி ருந்தனர்.
மேலும் அந்த உத்தரவில், அவ்வாறு அமைக்கப்படும் தமிழ்நாடுபிரஸ் கவுன்சில் மட்டுமே பத்திரிகையாளர் சங்கங்களுக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்றும்,அதன் மூலமாகவே பத்திரிகையாளர்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்குவிசாரணை நேற்று பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது நீதிபதிகள், "தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்ற பெயரில், மாநில அளவில் பிரஸ் கவுன்சில் அமைக்க சட்டவிதிகள் உள்ளனவா?" என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், "மத்திய அரசு சட்டப்படி இந்திய பிரஸ் கவுன்சிலுக்கே முழு அதிகாரம் உள்ளது, மாநில அளவில் பிரஸ் கவுன்சில் அமைக்கசட்டத்தில் வழிவகை உள்ளதா என்பது குறித்து இந்திய பிரஸ்கவுன்சில் மற்றும் பிற வழக்கறிஞர்கள் கருத்து தெரிவிக்கலாம்" என்று அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை அடுத்த மாதத் துக்கு தள்ளிவைத்தனர்.