நேருக்கு நேர் சந்திப்பின் மூலம் ஏற்றுமதியாளர்களின் நீண்டநாள் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு: ஜிஎஸ்டி, கலால் துறை சார்பில் புதிய திட்டம் அறிமுகம்

ஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் சென்னையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார் தமிழ்நாடு, புதுச்சேரி ஜிஎஸ்டி, கலால் மற்றும் சுங்கத் துறை தலைமை ஆணையர் எம்.வி.எஸ்.சவுத்ரி.
ஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் சென்னையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார் தமிழ்நாடு, புதுச்சேரி ஜிஎஸ்டி, கலால் மற்றும் சுங்கத் துறை தலைமை ஆணையர் எம்.வி.எஸ்.சவுத்ரி.
Updated on
1 min read

சென்னை: நேருக்கு நேர் சந்திப்பின் மூலம், ஏற்றுமதியாளர்களின் நீண்டநாள் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் புதிய திட்டத்தை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஜிஎஸ்டி, கலால் துறை அறிமுகம் செய்துள்ளது.

ஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில், ஏற்றுமதியாளர்கள் பங்கேற்கும் நேருக்கு நேர் சந்திப்பு நிகழ்ச்சி, சென்னையில் உள்ள இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய (ஃபியோ) அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், ஃபியோ தென்மண்டலத் தலைவர் இஸ்ரார் அகமது பேசும்போது, "சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் ஏற்றுமதியாளர்கள், தங்களுக்கு கிடைக்க வேண்டிய ரீஃபண்ட் தொகை நீண்டகாலமாக நிலுவையில் உள்ளதாகப் புகார் தெரிவிக்கின்றனர்.

தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு காரணங் களால் அவர்களுக்கு இத்தொகை கிடைக்காமல் உள்ளது. இந்நிலையில், இந்த சந்திப்பு ஏற்றுமதியாளர்களுக்கு ரீஃபண்ட் தொகை கிடைக்க உதவும்" என்றார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஜிஎஸ்டி, கலால் துறை மற்றும் சென்னை சுங்கத் துறை தலைமை ஆணையர் எம்.வி.எஸ்.சவுத்ரி, ஏற்றுமதி கொள்கை தொடர்பான பிரச்சினைகளை விளக்கினார். மேலும், ஜிஎஸ்டி மற்றும் சுங்கத் துறை தொடர்பாக, ஏற்றுமதியாளர்களின் மேற்கொள் ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு விளக்கம் அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில், ஃபியோ துணை இயக்குநர் ஜென்ரல் கே.உன்னிகிருஷ்ணன் மற்றும் ஏற்றுமதியாளர்கள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in