ராமேஸ்வரத்திலிருந்து கார் மூலம் கடத்தப்பட்ட 7.5 கிலோ தங்கம் பறிமுதல்

கடத்தல் தங்கத்தின் மதிப்பு ரூ.8.50 கோடி
மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Updated on: 
1 min read

திருச்சி: ராமேஸ்வரத்திலிருந்து காரில் கடத்திச் செல்லப்பட்ட 7.50 கிலோ தங்கத்தை திருச்சி சுங்கத்துறையின் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரக (டி.ஆர்.ஐ) அதிகாரிகள் நேற்று இரவு பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமேஸ்வரத்திலிருந்து சென்னைக்கு காரில் தங்கம் கடத்திச் செல்லப்படுவதாக, திருச்சி சுங்கத்துறையின் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரக (டி.ஆர்.ஐ) அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் திருச்சி சுங்கத்துறையின் டிஆர்ஐ அதிகாரிகள் நேற்று இரவு சமயபுரம் டோல்பிளாஸா அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது காரில் வந்த 3 பேரிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்தனர்.

அவர்களின் காரில் சோதனை நடத்தியபோது 7.50 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டிஆர்ஐ அதிகாரிகள் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து, 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்மதிப்பு சுமார் ரூ.8.50 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

<div class="paragraphs"><p>மாதிரிப் படம்</p></div>
‘தவெக ஆட்சியில் தமிழகம் 6 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது’ - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

X