திட்டக்குடி அருகே பள்ளியில் முட்டை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்

திட்டக்குடி அருகே பள்ளியில் முட்டை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்
Updated on
1 min read

திட்டக்குடி அருகே உள்ள வையங் குடி கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 188 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். ஒரு தலைமை ஆசிரியர், 6 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று வழக்கம் போல் பள்ளியில் மதியம் உணவு டன் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்பட்டது. இதைச் சாப்பிட்ட வையங்குடி கிராமத்தைச் சேர்ந்த வீரபாண்டியன் மகன் பிரதீஷ், (11) கோவிந்தசாமி மகன் பாலமுருகன் (12), சிவக்குமார் மகள் கார்த்திகா (12), குப்புசாமி மகன் நவீன்குமார் (13), குமரவேல் மகன் பால்ராஜ் (13), முத்துக்கருப்பன் மகன் பிரபாகரன் (13) பெரியசாமி மகன் ராம்கி (13) தங்கராஜ் மகன் அன்ப ரசன் (13) முத்துவேல் மகன் நிதிஷ் (13), ராஜா மகன் ஆதித்யா (13) உள்ளிட்ட 10 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. தகவல்அறிந்த அப்பகுதி இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் மாணவர் களை கொண்டு வந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து திட்டக்குடி அரசு மருத்துவமனையில் மாணவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர். ஆவினங்குடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in