

அதிமுகவில் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தவர்களிடம், தொகுதிக்கு சிலரை மட்டும் அழைத்து கட்சி பொதுச் செயலர் ஜெயலலிதா நேர்காணல் நடத்திவருகிறார். மதுரை மாவட்டத்தில் 10 தொகுதி களுக்கும் தொகுதிக்கு சிலருக்கு நேர்காணலில் பங்கேற்க அழைப்பு விடுத்ததாகக் கூறப்பட்டது. தற்போது அவர்களில் சிலருக்கு அழைப்பு வரவில்லை என்றும், கவுரவத்துக்காக அழைப்பு வந்ததாக தகவலை கசியவிட்டு சென்னை சென்றதாகவும் கூறப்படுகிறது. அத னால், மதுரை அதிமுகவில் யார் யாருக்கு அழைப்பு வந்தது என தெரியாமல் நிர்வாகிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.
அழைக்கப்படாத நிர்வாகிகள் விரக்தியில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டவர்கள் மீது, பல்வேறு குற்றச்சாட்டுகளை புகாராக போயஸ் கார்டனுக்கும், தலைமைக்கழகத்துக்கும் அனுப்பி வருகின்றனர்.
அதிமுகவை பொருத்தவ ரையில் யாருக்கும் வேட்பா ளராகும் அதிர்ஷ்டம் கிடைக்கலாம் என்பதால் விண்ணப்பித்த மதுரை அதிமுக நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அதிமுகவினர் கூறியதாவது: மதுரையில் சமீ பத்தில் அதிமுக கவுன்சிலர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மற்றொரு கவுன்சிலர் தற்கொலை செய்துகொண்டார்.
சில மாதங்களுக்கு முன், அமைச்சர் அலுவலகங்களிலேயே உள்கட்சி பூசலில் சிலர் வெடிகுண்டுகளை வீசினர். இதேபோல், ஒவ்வொரு வட்டம், நகரம், ஒன்றியம், மாவட்ட அளவில் நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் மட்டத்தில் தனித்தனி அணி செயல்படுகிறது. இதனால் மாவட்ட நிர்வாகிகள் மீது கட்சி தலைமை கடும் அதிருப்தியில் இருக்கிறது. மாவட்டத்தில் தற்போதுவரை அமைச்சருக்கும், மேயருக்கும் சீட் உறுதியாகிவிட்டதாக அவ ரது ஆதரவாளர்கள் சொல்லி வருகின்றனர். செல்வாக்கு, பணபலம், பதவி அதிகாரத்தில் உள்ளவர்களை தவிர கட்சி க்காக உண்மையிலேயே உழைத்தவர்கள், மக்கள் மத்தியில் கெட்டபெயர் இல்லாத நிர்வாகிகளுக்கு வாய்ப்பு கிடைக்க உள்ளதாக கூறப்படுகிறது என்றனர்.