Last Updated : 13 Mar, 2016 11:05 AM

 

Published : 13 Mar 2016 11:05 AM
Last Updated : 13 Mar 2016 11:05 AM

திமுகவுடனான தொகுதி பங்கீடு குறித்து ராகுலுடன் இளங்கோவன் ஆலோசனை

திமுகவுடனான தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியுடன் அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ் இளங் கோவன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

தேமுதிகவுடன் கூட்டணிக்காக முயற்சித்து வந்தததால் காங்கி ரஸுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதை திமுக தாமதித்து வந்தது. தனித்துப் போட்டி என தேமுதிக அறிவித்து விட்டதால் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் திமுக வேகம் காட்டி வருகிறது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

இந்நிலையில், நேற்று டெல்லி சென்ற தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தேமுதிக தனித்து போட்டி என அறிவித்துள் ளதால் எழுந்துள்ள அரசியல் சூழல் குறித்தும், திமுகவுடனான தொகுதி பங்கீடு குறித்தும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆலோ சனை நடத்தியுள்ளார். இதையடுத்து தொகுதி பங்கீட்டு குழு, தேர்தல் அறிக்கை குழு, தேர்தல் பணிக் குழு என 3 குழுக்களை அமைக்க முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேசும் குழுவில் மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லி கார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த செய்தித் தொடர்பாளர் அஜய் மக்கான், அகில இந்தியப் பொதுச் செயலாளரும், தமிழக பொறுப் பாளருமான முகுல் வாஸ்னிக், இளங்கோவன், கோபிநாத் ஆகியோர் இடம்பெற வாய்ப்பிருப்பதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்தக் குழுவில் ப.சிதம்பரம், கே.வீ.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி, சு.திருநாவுக்கரசர், செல்லக்குமார், ஜெயக்குமார் ஆகியோர் இடம்பெற மாட்டார்கள் என்றும், தேர்தல் பணிக்குழுவில்தான் இவர்களுக்கு இடம் கிடைக்கும் என்றும் கூறப் படுகிறது.

இது தொடர்பாக இளங்கோவனி டம் கேட்டபோது, ‘‘தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்பாக திமுக வுடன் எங்களுக்கு பிரச்சினை வர வாய்ப்பில்லை. காங்கிரஸின் சுயமரியாதைக்கேற்ப தொகுதிகளை திமுக ஒதுக்கும். தேவைப்பட்டால் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச மேலிடம் குழு அமைக்கும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x