

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த ஜம்பை நல்லிபாளையத்தில் பாமக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் ஜெ.குரு பேசியது:
சட்டப்பேரவை தேர்தலில் பாமக வெற்றி பெற்று அன்புமணி ராமதாஸ் முதல்வராவது உறுதி. பாமக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு உரம், விதை, பூச்சி மருந்தை இலவசமாக வழங்குவோம். ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி படிப்பு வரை இலவசமாக அளிப்போம். கடந்த 50 ஆண்டு காலமாக திமுக, அதிமுக கட்சிகள் மாறி, மாறி ஆண்டு தமிழகத்தை சீரழித்து விட்டன. மதுவை குடிக்க கொடுத்து மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திவிட்டார்கள். வரும் தேர்தலில் பணத்துக்காக உங்கள் ஓட்டை விற்காதீர்கள். அது உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை அடகு வைப்பதற்கு சமம். எனவே, பாமக ஆட்சிக்கு வர மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்’என்றார்.